தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள கடையனோடை யாதவர் தெருவைச் சேர்ந்தவர் லிங்கதுரை (63), இவரது மனைவி ஜெயலட்சுமி (52). இவர்களது மகன் அசோக்.
இந்நிலையில் மகனின் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுவந்தன. இச்சூழலில் அசோக்கிற்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில், நேற்று (ஜூன் 24) அதிகாலை அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்த காவல் துறையினர் விரைந்துசென்று ஜெயலட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: பணத்துக்காக 14 வயது சிறுமியை தந்தையே விற்ற அவலம்!