ETV Bharat / state

விரைவில் திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை - அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல் - Chief Minister travels abroad

தூத்துக்குடி: தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் விரைவில் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யும் திட்டம் அமலுக்கு வர இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி
author img

By

Published : Sep 3, 2019, 7:31 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வடக்கு திட்டங்குளத்தில் தனியார் டிராக்டர் விற்பனை நிறுவன தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு விற்பனையை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முதலமைச்சர் தன்னுடைய வெளிநாட்டு பயணத்தில் எந்தெந்த நிறுவங்களை ஆய்வு செய்துள்ளார், என்ன ஒப்பந்தம் செய்துள்ளார் என்பது பற்றி வெளிப்படையாக ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

லண்டனில் உள்ள தமிழர்கள், தொழில் நிறுவனங்கள், அங்கு உள்ள மருத்துவமனை நிர்வாகிகளை முதலமைச்சர் சந்தித்து விரைவில் அங்கு உள்ளது போலவே தமிழ்நாட்டிலும் ஏர் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தி, வெளிநாட்டுக்கு இணையான மருத்துவ வசதியை கொண்டு வருவதற்கான முயற்சி எடுத்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து பேசிய அமைச்சர், அமமுகவில் புதியதாக மாவட்டச் செயலாளர்களை தினகரன் நியமிக்கவில்லை என்றும் அக்கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் தாய்க்கழகமான அதிமுகவில் இணைந்து விட்டதாகவும் தெரிவித்தார். தாங்கள் அமமுகவை ஓர் இயக்கமாகவோ, அதிமுகவுக்குப் போட்டியாகவோ நினைக்கவில்லை எனவும் கூறினார்.

திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தி, திரையரங்கு கட்டணங்களை ஒழுங்குபடுத்தவும், திரையரங்கில் பார்க்கிங் கட்டணத்தை வரைமுறை படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் இனி ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்வதற்கான திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Intro:தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் இனி ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை- விரைவில் அமல் - அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ தகவல்
Body:தூத்துக்குடி

தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் இனி ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது விரைவில் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும்,எது கேலிக் கூத்து என்பது மக்களுக்கு தெரியும்,மு க ஸ்டாலின் வெளிநாடு சென்றதை தான் மக்கள் கேலிக்கூத்தாக நினைக்கின்றனர்.அமமுகவை நாங்கள் ஒரு இயக்கமாகவே எங்களுக்கு போட்டியாகவோ நினைக்கவில்லை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வடக்கு திட்டங்குளத்தில் தனியார் டிராக்டர் விற்பனை நிறுவன தொடக்க விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கலந்து கொண்டு விற்பனையை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் எது கேலிக் கூத்து என்பது மக்களுக்கு தெரியும்,மு க ஸ்டாலின் வெளிநாடு சென்றதை தான் மக்கள் கேலிக்கூத்தாக நினைக்கின்றனர், முதல்வர் பயணம் திட்டமிட்டு வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எந்தெந்த நிறுவங்களை ஆய்வு செய்துள்ளார், என்ன ஒப்பந்தம் செய்துள்ளார் என்பதை வெளிப்படையாக ஊடகங்களுக்கு கொடுக்கப்படுகிறது.மு க ஸ்டாலின் பல முறை வெளிநாடு சென்றிருக்கிறார் இதுபற்றி என்றைக்காவது ஊடகத்தில் வந்திருக்கிறதா , எதற்காக வெளிநாடு சென்றார் என்று அவர்தான் வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்றும்,அது பற்றி நாங்கள் கேள்வி எழுப்பவில்லை எதிர்க்கட்சித் தலைவரும் அரசின் ஒரு பங்கு தான், அவரைக் கேள்வி கேட்பதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது. நாகரீகம் கருதி அதை நாங்கள் கேட்கவில்லை என்றும், லண்டனில் உள்ள தமிழர்கள், தொழில் நிறுவனங்கள், அங்கு உள்ள மருத்துவமனை நிர்வாகிகளை முதல்வர் சந்தித்தார்.அங்கு உள்ளது போல மருத்துவமனை ஏர் ஆம்புலன்ஸ் வசதியை விரைவில் தமிழகத்தில் ஏற்படுத்தி, வெளிநாட்டுக் இணையான மருத்துவ வசதியை கொண்டு வர வேண்டுமென்று முயற்சி எடுத்துள்ளார்.இது எல்லாம் வெளிப்படையாகத் தான் நடக்கிறது. இதில் என்ன மர்மம் இருக்குது என்று தெரியவில்லை.எதையெடுத்தாலும் அரசியல் செய்வதென்றால் இதன் மூலமாக மு க ஸ்டாலின் முகத்திரை மக்களிடம் வெளிப்பட்டுள்ளது. மக்கள் அதை விரும்பவில்லை என்றும், அமமுகவில் புதியதாக மாவட்டச் செயலாளர்களை டிடிவி தினகரன் நியமிக்கவில்லை, அங்கிருந்து சென்ற அவருக்கு பதிலாக காலி இடத்தினை நிரப்பியிருக்கிறார்அங்கிருந்து வந்தவர்கள் தாய் கழகமான அதிமுகவில் இணைந்து விட்டனர்.ஆகையால் காலி இடத்தை நிரப்பும் பணியை அவர் செய்துள்ளார்.அந்த இயக்கத்தை இருப்பது போன்று காட்ட வேண்டும் அதற்காக நடவடிக்கை எடுத்துள்ளார். அமமுகவை நாங்கள் ஒரு இயக்கமாகவே எங்களுக்கு போட்டியாகவோ நினைக்கவில்லை.47 ஆண்டுகால அதிமுக அரசியல் வரலாற்றில் பிறந்தவர்கள் ஒன்று இணைந்ததாக தான் வரலாறு உண்டு, பிரிந்தவர்கள் நீடித்ததாக வரலாறு இல்லை.அதே தேர்தல் மூலமாக ஒரு சதவீத அளவு கூட இல்லாமல் வாக்களித்து அந்த கட்சி இல்லை என்பதை மக்கள் புறக்கணித்துள்ளனர். அவர்களைப் பற்றி பேசி எங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும், திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த பல விதிமுறைகளை வகுத்து உள்ளோம்,திரையரங்கு கட்டணங்களை ஒழுங்குபடுத்தி உள்ளோம்,திரையரங்கில் பார்க்கிங் கட்டணமும் வரைமுறை படுத்தப்பட்டுள்ளது.ஆன்லைன் டிக்கெட் வெளிப்படையாக தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு காட்சிக்கு எவ்வளவு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது , எத்தனை காட்சிகள் திருடப்படுகிறது எவ்வளவு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது என்பதை பரிசோதனை செய்து உள்ளோம். விரைவில் அது நடைமுறைக்கு வர உள்ளது என்றும்,திரையரங்கில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரக்கட்டுப்பாடு ஆய்வு செய்யப்படுகிறது, அதேபோன்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும், என்றும் ,சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஒன்று இரண்டு பணிகளை தவிர அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்றார்.
பேட்டி : அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.