ETV Bharat / state

பால் உற்பத்தி அலுவலக திறப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர்கள் - Milk Production Office Opening Ceremony

தூத்துக்குடி: மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றிய அலுவலக திறப்பு விழாவை அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ ஆகியோர் புறக்கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழா ஏற்பாடுகள்
author img

By

Published : Oct 8, 2019, 2:50 PM IST

தூத்துக்குடி மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய ஆவின் தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். பொது மேலாளர் தியகராஜ் தங்கையா முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் தமிழக ஆவின் பொது மேலாளர் காமராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

விழா ஏற்பாடுகள்
விழா ஏற்பாடுகள்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசுகையில், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 26 ஆயிரம் லிட்டர்கள் அளவுக்கு ஆவின் நிறுவனம் மூலம் பால் விற்பனை நடைபெற்று வருகிறது. இதை 30 ஆயிரம் லிட்டராக அதிகரிக்கச் செய்வதற்கான முயற்சிகள் நடபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய பால்பண்ணை அமைப்பதற்காக ஆவின் நிறுவனம் சார்பில் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதை பரிசீலித்து இடம் ஒதுக்கித் தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தூத்துக்குடி மாவட்டம் சுற்றுலா தலமாக இருப்பதால் கோவில்பட்டி, திருச்செந்தூர், குலசேகரப்பட்டனம், தூத்துக்குடி உள்பட முக்கிய இடங்களில் அதிநவீன ஆவின் பார்லர்கள் அமைக்கப்படவேண்டும். இதனால் ஆவின் பொருட்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய முடியும்’ என்றார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆவின் கூட்டுறவு ஒன்றிய திறப்பு விழாவிற்கு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்துகொள்வதாக இருந்தது. இதற்காக மாவட்ட ஆவின் நிர்வாகம் சார்பில் தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏவுக்கு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் இன்று நடைபெற்ற ஆவின் ஒன்றிய அலுவலக திறப்பு விழாவில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றிய அலுவலக திறப்பு விழா - அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ புறக்கணிப்புBody:
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய ஆவின் தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். பொது மேலாளர் தியகராஜ் தங்கையா முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் தமிழக ஆவின் பொது மேலாளர் காமராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவை தமிழக ஆவின் பொது மேலாளர் காமராஜ் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து பேசிய ஆவின் பொது மேலாளர் காமராஜ் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களுக்கும் சேர்த்து செயல்பட்டுவந்த ஆவின் நிறுவனமானது தனியே பிரிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் தனி ஒன்றியமாக செயல்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்நிலையில் உடனடியாக மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு ஒன்றிய அலுவலகம் திறக்கும் பொருட்டு இன்று இந்த அலுவலக திறப்பு நிகழ்ச்சியை நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி ஆவின் பால் நிறுவனங்கள் தனியே பிரிக்கப்பட்டதன் மூலம் இரு மாவட்டங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆயிரம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலை 60 ஆயிரம் லிட்டராக உயரத்தவேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் மத்திய பால் பண்ணை அமைப்பதற்காக 50 ஏக்கர் நிலம் ஆவின் நிர்வாகம் சார்பில் கோரப்பட்டுள்ளது. இந்த நிலத்தை மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் ஒதுக்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் பண்ணை அமைப்பதன் மூலம் பால் விற்பனையும், தொழில் வளர்ச்சியும் அடையும். தூத்துக்குடியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஆவின் பொருள்களை ஏற்றுமதி செய்ய முடியும். ஆவின் நிறுவனம் சார்பில் ஆவின் நிறுவன பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது புது முயற்சியாக வளைகுடா நாடுகளில் ஆவின் பொருட்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இங்கு தூத்துக்குடி மாவட்டத்திலும் ஆவின் நிறுவனத்தின் அதி நவீன பார்லர்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு ஆவின் நிறுவன பொருள்கள் கிடைக்கும்.
ஆகவே வரும் காலங்களில் ஆவின் நிறுவனத்தை உச்சத்தை அடைய செய்வதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது என்றார்.

இதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி பேசுகையில்,
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 26 ஆயிரம் லிட்டர் அளவுக்கு ஆவின் நிறுவனம் மூலம் பால் விற்பனை நடைபெற்று வருகிறது. இதை 30 ஆயிரம் லிட்டராக அதிகரிக்கச் செய்வதற்கான முயற்சிகள் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய பால்பண்ணை அமைப்பதற்காக ஆவின் நிறுவனம் சார்பில் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதை பரிசீலித்து இடம் ஒதுக்கித் தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தூத்துக்குடி மாவட்டம் சுற்றுலாத்தலமாக இருப்பதால் கோவில்பட்டி, திருச்செந்தூர், குலசேகரப்பட்டணம், தூத்துக்குடி உள்பட முக்கிய இடங்களில் அதிநவீன ஆவின் பார்லர்கள் அமைக்கப்படவேண்டும். இதனால் ஆவின் பொருட்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய முடியும் என்றார்.

நிகழ்ச்சியில் முதல் விற்பனையை ஆவின் பொதுமேலாளர் காமராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்ட ஆவின் பொது மேலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக ஆவின் பொதுமேலாளர் காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
தீபாவளிக்கு புதிய இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்த உள்ளோம். இதன் மூலம் ரூ.150 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆவின் கூட்டுறவு ஒன்றிய திறப்பு விழாவிற்கு தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக மாவட்ட ஆவின் நிர்வாகம் சார்பில் தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக செயல்பட்டு வரும் சண்முகநாதன் எம்எல்ஏவுக்கு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் இன்று நடைபெற்ற ஆவின் ஒன்றிய அலுவலக திறப்பு விழாவில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:Visual, byte in process. Will upload soon.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.