தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அமைந்துள்ளது.
இச்சிலை பொறுப்பாளர் ஆறுமுகபாண்டி பசும்பொன் தேவர் சிலைக்கு குளிர்சாதன வசதி செய்து தருமாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், அமைச்சருமான கடம்பூர் ராஜுவிடம் கோரிக்கைவைத்தார்.
இவரின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் கடம்பூர் ராஜு சொந்த நிதியிலிருந்து 51 ஆயிரம் ரூபாயை கோவில்பட்டி நகர செயலாளர் விஜய பாண்டியன் தலைமையில் சிலை பொறுப்பாளர் ஆறுமுகபாண்டியிடம் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு குளிர்சாதன வசதி செய்யப்பட்டது.