ETV Bharat / state

டிஎன்பிஎல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய ஆய்வு: அமைச்சர் தங்கம் தென்னரசு

தூத்துக்குடி: தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் (TNPL) ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய ஆய்வு நடைபெற்று வருகிறது என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய ஆய்வு

author img

By

Published : May 17, 2021, 7:32 PM IST

கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மருத்துவக் கழகம் மத்திய அரசிடம் ஆக்ஸிஜன் அனுப்ப கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையின் அடிப்படையில் ஒடிசா மாநிலம் ரூர்கேலா இரும்பு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட 78.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ரயில் நேற்று முன்தினம் (மே.15) ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து புறப்பட்டு நேற்று (மே.16) சேலம் வழியாக திண்டுக்கல் வந்தடைந்தது. இதையடுத்து அங்கிருந்து இன்று (மே.17) பிற்பகலில் கிளம்பிய சிறப்பு ரயில், தூத்துக்குடி மீளவிட்டான் சரக்கு மாற்று ரயில்வே நிலையத்திற்கு வந்தடைந்தது.

தூத்துக்குடி வந்த சிறப்பு ரயிலை கனிமொழி எம்.பி. தலைமையில் தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், வருவாய் அலுவலர் கண்ணப்பன், தென்னக கூடுதல் ரயில்வே மேலாளர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இதைத் தொடர்ந்து ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரிகள் விடுவிக்கப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு மருத்துவ பயன்பாட்டுக்காக பிரித்து அனுப்பப்பட்டன.

டிஎன்பிஎல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய ஆய்வு

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, "தமிழ்நாட்டில் செயல்படாமல் உள்ள தொழிற்சாலைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க ஆய்வு நடைபெற்று வருகிறது.

அதன்படி நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் ஒரு தொழிற்சாலை கண்டறியப்பட்டு, அங்கு உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளிலும் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் (TNPL) ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய ஆய்வு நடைபெற்று வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: கோவையில் ஆக்ஸிஜன் பஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.