ETV Bharat / state

ஓடிடி தமிழ்நாடு மட்டுமல்ல உலகளாவிய பிரச்னை - கடம்பூர் ராஜூ - தூத்துக்ரகுடி மாவட்ட செய்தி

தூத்துக்குடி: ஓடிடியில் திரைப்படம் வெளியாவது ஆரோக்கியமானது அல்ல என்பது எனது கருத்து என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

minister
minister
author img

By

Published : Aug 25, 2020, 10:24 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 417 பயணாளிகளுக்கு 2 கோடியே 11 லட்சம் மதிப்பில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி, கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது, "ஓடிடி (OTT) தமிழ்நாடு மட்டுமல்ல உலகளாவிய பிரச்னை. ஓடிடியில் திரைப்படம் வெளியீடு தொடர்பாக தமிழ்நாட்டில் சட்டம் ஏதும் இல்லை. சூழ்நிலையை கருத்தில் கொண்டு திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள், திரைப்படத்துறையினர் நலன் கருதி கலந்து பேச வேண்டும். இதனால், பல்லாயிரம் திரைப்பட தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

ஓடிடியில் திரைப்படம் வெளியிடப்படுவது ஆரோக்கியமானது அல்ல என்பது எனது கருத்து. திரைப்படத் துறையினர் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அரசு உதவி செய்யும். திரையரங்குகளை திறக்க சில காலமாகும் என்பதால் வேறு வழியில்லை எனக் கூறி ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவதை விட, சில காலம் பொறுத்திருப்பது நல்லது.

திரையரங்குகள், ஷாப்பிங் மால் உள்ளிட்டவர்கள் அதிகளவில் மக்கள் கூடும் நிலை இருப்பதால் திரையரங்குகள் தற்போது திறக்க வாய்ப்பில்லை. குறிப்பிட்ட எண்ணிக்கை வைத்து திரையரங்குகளை இயக்க அனுமதி கொடுத்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும். காலப்போக்கில் ஏற்படும் சூழ்நிலையை பொறுத்து அரசு முடிவெடுக்கும்" என்றார்.

இதையும் படிங்க: கணவரின் பணத்தில் முதல் மனைவிக்கு மட்டுமே உரிமை உண்டு'- மும்பை உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.