ETV Bharat / state

திமுகவின் பரப்புரை எங்களுக்கு பொருட்டல்ல - அமைச்சர் கடம்பூர் ராஜூ - திமுகவின் தேர்தல் பரப்புரை

தூத்துக்குடி: திமுகவின் தேர்தல் பரப்புரை எங்களுக்கு பொருட்டல்ல என அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

minister kadampur raju
minister kadampur raju
author img

By

Published : Dec 24, 2020, 12:20 AM IST

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் அம்மா மினி கிளினிக் மற்றும் தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

minister kadampur raju
minister kadampur raju

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், தருவைகுளத்தைச் சார்ந்த அந்தோணி மைக்கேல் என்பவரது படகில் மீன்பிடிக்க சென்ற ஏழு பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் அறிந்ததும் அவர்களை மீட்க முதலமைச்சர் பழனிசாமி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு மீனவர்கள் ஏழு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

minister kadampur raju
minister kadampur raju

இன்னும் ஐந்து மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும் என ஸ்டாலின் கூறி வருவது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், வாழ்நாள் முழுவதும் ஸ்டாலின் கனவு காண வேண்டிய தான். திமுகவினரை உற்சாகப்படுத்துவதற்காக ஸ்டாலின் அவ்வாறு கூறி வருகிறார். திமுகவினரை தக்க வைத்துக் கொள்வதற்காக ஆட்சி மாற்றம் என்று பேசி வருகிறார். 2021 தேர்தல், ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அல்ல அதிமுக ஆட்சியை தொடர்வதற்கான தேர்தல்.

minister kadampur raju

கருணாநிதியின் தலைமையில் திமுகவோடு 10 தேர்தல்களை சந்தித்து ஏழு முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. எனவே, ஸ்டாலின் எங்களுக்கு கத்துக்குட்டி. அவருடைய பரப்புரை எங்களுக்கு பொருட்டல்ல என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.