தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் பேரூராட்சி அசனார்நகர் பகுதியில் பொது நிதி ரூ.28.50 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட உள்ளுர் குடிநீர் திட்டப் பணிகளின் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நேற்று (ஜூலை 16) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு தொடக்கி வைத்தார்.
பின்னர் கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட ஸ்டாலின் காலனியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை கட்டடத்தை அமைச்சர் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இதில் வருவாய் கோட்டாட்சியர் விஜயா, தாசில்தார் மணிகண்டன், நகராட்சி கமிஷனர் ராஜராம், நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், ஊராட்சி ஒன்றியக் குழு சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாரிடம் விடக்கூடாது: விவசாயிகள் வலியுறுத்தல்!