சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் தேர்தல் பரப்புரைக்காக விமானம் மூலம் இன்று (மார்ச் 12) தூத்துக்குடி விமான நிலையம் வந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் கூறியதாவது, இந்த தேர்தலில் வேட்பாளர்கள் பட்டியலை முதல் முதலாக அறிவித்த கட்சி அதிமுக. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக அமோக வெற்றி பெறும். அம்மாவின் நினைவிடத்தில் வெற்றியை சமர்ப்பித்து, மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரியணை ஏறுவார்.
அதிமுக அரசு மக்கள் நம்பிக்கையை பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்ட தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படவில்லை.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை, வெற்றிக்கு பலம் சேர்க்கும். அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறும்" என்றார்.
இதையும் படிங்க: திமுகவை வீழ்த்தக் கூடிய ஒரே சக்தி எடப்பாடி - எஸ்.பி.வேலுமணி