ETV Bharat / state

'சதுரங்க வேட்டை படத்தைப் போன்று மக்களை ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள் திமுகவினர்!'

தூத்துக்குடி: சதுரங்க வேட்டை படத்தைப் போன்று மக்களை ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள் திமுகவினர் என செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

minister-kadambur-raju-about-by-election-victory
author img

By

Published : Oct 26, 2019, 9:47 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா நடைபெற்றது. இதன் 9ஆம் திருவிழாவில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கலந்துகொண்டார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "அரசு விடுமுறை நாள்களில் திரையரங்குகளில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒன்றுதான். அதற்கு மேலேயும் காட்சிகள் திரையிட வேண்டுமென்றால், அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

பல்வேறு சோதனைகள் வந்தபோதும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சாதனை படைத்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் பல்வேறு சரித்திர சாதனைகளைச் செய்துள்ளோம். மக்களவைத் தேர்தலின்போது திமுக நடைமுறைப்படுத்த முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. அதனை நம்பி மக்கள் ஏமாந்தார்கள். சதுரங்க வேட்டை படத்தைப் போன்று ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள் திமுகவினர். நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தாலும், இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து ஆட்சியைத் தொடர மக்கள் ஆதரவளித்துள்ளனர்.

அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு

ஆட்சி மாற்றம் வரும் என ஸ்டாலின் கூறிவந்த நிலையில், அதிமுகவின் இடைத்தேர்தல் வெற்றி ஸ்டாலினுக்கு வாய்ப்பூட்டு போடும் வகையில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விக்கிரவாண்டியில் திமுக தோல்வி! - ஒரு அலசல் டேட்டா ரிப்போர்ட்

Intro:சதுரங்க வேட்டை படத்தை போன்று மக்களை ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள் திமுகவினர் - அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பேட்டிBody:

சதுரங்க வேட்டை படத்தை போன்று மக்களை ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள் திமுகவினர் என்றும், ஆட்சி மாற்றம் வரும் என்று சொல்லிவரும் முக ஸ்டாலினுக்கு இடைத்தேர்தல் வெற்றி ஒரு வாய்ப்பு பூட்டு என்பதனை புரிந்து கொள்ளும் வகையில் மக்கள் தீர்ப்பு அளித்துள்ளார்கள் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா நடைபெற்றது. இக்கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா அக்டோபர் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, இரவு அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.9ஆம் திருநாள் தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் செ. ராஜு செய்தியாளரிடம் பேசுகையில் சனி, தீபாவளி திங்கட்கிழமை ஆகி நாட்கள் விடுமுறை என்பதால் ஒரு காட்சி மட்டும் அதிகமாக திரையிட்டு கொள்ளலாம். அதற்குமேல் காட்சி ஒளிபரப்பு வேண்டுமென்றால் அரசிடம் அனுமதி பெற வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு ஆட்சிக்கு கட்சிக்கும் பல்வேறு சோதனைகள் வந்தபோதும் அத்தனையும் தாண்டி இன்றைக்கு நாங்குநேரியில் சாதித்துள்ளோம். விக்ரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம். குடி மராமத்து பணி, மேலை நாடுகளுக்கு சென்று வேலை வாய்ப்பை உருவாக்கியது, தமிழகத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது, இந்தியா சீனா நட்புறவை உலகமே பார்த்து வியக்கும் அளவிற்கு நடத்திக் காட்டியது, சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகம் பெற்றுள்ளது. மேலும் ஆறு மருத்துவ கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது. இது போன்ற சரித்திர சாதனைகள் நடக்க இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக மக்கள் இரு தொகுதியில் வெற்றியை தந்து உள்ளனர் என்றும்,நாடாளுமன்றத் தேர்தலில் வேறுவிதமாக வாக்களித்தாலும் தமிழகத்தில் ஆட்சி தொடர வாய்ப்பு அளித்தனர் மக்கள்,நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக நடைமுறைப்படுத்த முடியாத பொய்யான வாக்குறுதியை அளித்தது.சதுரங்க வேட்டை படத்தை போன்று மக்களை ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள் திமுகவினர்.திமுகவின் வாக்குறுதி நம்பி ஏழை எளிய மக்கள் 5 பவுனுக்கு கீழே உள்ள நகைகளை வங்கி வைத்து திருப்ப முடியாத நிலையில் உள்ளனர்.இந்த ஆதங்கமும் கோபமும் இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்களிடையே காணப்பட்டது. இடைத்தேர்தல் வெற்றி என்பது தமிழகத்தில் என்றும் அதிமுக ஆட்சி இருக்க வேண்டும் என்று மக்கள் நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. ஆட்சி மாற்றம் வரும் என்று சொல்லிவரும் முக ஸ்டாலினுக்கு இடைத்தேர்தல் வெற்றி ஒரு வாய்ப்பு பூட்டு என்பதனை புரிந்து கொள்ளும் வகையில் மக்கள் தீர்ப்பு அளித்துள்ளார்கள் என்றார்

பேட்டி: அமைச்சர் கடம்பூர் செ. ராஜுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.