தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் தாலுகா அலுவலகம் பழுதடைந்த காரணத்தால் கடந்த இரண்டாண்டுக்கு மேலாக வாடகை கட்டடத்தில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் போதிய இடவசதி இல்லாததால் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து, புதிய தாலுகா அலுவலகம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சட்டப்பேரவை உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்தனர். பின்னர் சட்டப்பேரவை உறுப்பினரின் முயற்சியால் பழைய தாலுகா அலுவலகம் இருந்த இடத்தில் புதிய தாலுகா அலுவலகம் அமைப்பதற்காக 2 கோடியே 97 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று(ஆகஸ்ட் 3) சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் முன்னிலையில் செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி ஆகியோர் புதிய தாலுகா அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனர்.