கரோனா வைரஸ் எதிரொலியாக தமிழ்நாடு அரசால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் என்று அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
மேலும் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் மக்களை கண்காணித்துவருகின்றனர். இந்நிலையில் இன்று (மார்ச்29) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 144 தடை உத்தரவையும் மீறி கடலையூர் சாலை, பார்க் ரோடு ஆகிய இடங்களில் உள்ள மீன் கடை, கோழிக்கடை, ஆட்டுக்கறிக் கடை ஆகியவற்றில் காலை முதலே பொதுமக்கள் குவிய தொடங்கினர்.
கரோனா எச்சரிக்கையையும் மீறி அசைவப் பிரியர்கள் கடைகளில் குவிய தொடங்கிய சம்பவம் தொடர்பாக கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து முகக் கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். முகக் கவசம் அணியாதவர்களுக்கு கறி வழங்க கூடாது என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கினால் உச்சத்தைத் தொட்ட இறைச்சிகளின் விலை!