தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு தூத்துக்குடி நகரில் சாலை விரிவாக்கம் செய்தல், புதிதாக பேருந்து நிலையம் அமைத்தல், பூங்காக்கள், அறிவியல் பூங்காக்கள், தெருவிளக்கு, இணையதள வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி வ.உ.சி மார்க்கெட் பகுதியை இடித்துவிட்டு, புதிதாக வணிக வளாகம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதற்காக வ.உ.சி. மார்க்கெட் வியாபாரிகளுக்கு கடையை காலி செய்ய எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிராகரித்தும் வியாபாரிகள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு ஐக்கிய வியாபாரிகள் சங்க செயலாளர் செந்தில் முருகன் மற்றும் நிர்வாகிகள் தலைமை தாங்கினார்.
ஆனால் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், இப்பகுதியை இடித்து அகற்றுவதற்கு மாநகராட்சி அலுவலர்கள் முயன்று வருகின்றனர். இதைக் கடுமையாக கண்டிக்கிறோம். ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால் அது வ.உ.சி. சந்தை பகுதிக்கு தேவையற்றது. இந்தச் சந்தையில் சுமார் 602 கடைகள் உள்ளன. இப்பகுதி கடைகளை நம்பி சுமார் 50,000 பேர் தங்களின் வாழ்வாதாரத்தை அமைத்துள்ளனர். வ.உ. சி. மார்க்கெட் கடைகளை அப்புறப்படுத்துவதன் மூலம், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே வ.உ.சி. மார்க்கெட்டுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் தேவை இல்லை. இத்திட்டத்தினை ஊருக்கு வெளியே செயல்படுத்திட எங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. வியாபாரிகளின் போராட்டத்திற்கு அரசு அலுவலர்களும் அரசும் செவிசாய்க்கவில்லை எனில், அடுத்தக் கட்டமாக வியாபாரிகள் பொதுமக்கள் இணைந்து ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடுவது எனத் தீர்மானித்துள்ளோம்” என்றனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பாளர்களுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை- ஹர்ஷ் வர்தன்