கரோனால் இந்தியாவில் இதுவரை 199 பேர் உயிரிழந்தும், ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கான முழுக்கவச உடை தயாரிப்பு பணியில் கோவில்பட்டி அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்று தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 1500 முழுக்கவச உடைகள் தயாரித்து வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் அனுப்புகின்றனர்.
இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர் கூறுகையில், “நாங்கள் இதற்கு முன்பு முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டோம். ஜிப்மர், பி.ஜி.ஐ., எய்ம்ஸ், சஞ்சய் காந்தி ஆகிய மத்திய அரசின் மருத்துவமனைகளுக்கும், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் நிறுவனத்துக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வந்தோம்.
தற்போது கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின்னர் முழுக்கவச உடைகள் தயாரிக்கிறோம். இது முழுமையாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 90 ஜி.எஸ்.எம். நெய்யப்படாத துணி என்றழைக்கப்படும் ஸ்பன் துணியில் தயாரிக்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க...ஊரடங்கால் பசியில் வாடும் நாடோடி மக்கள்!