தூத்துக்குடி: கோவில்பட்டி வேலாயுதபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் சேர்மராஜ் (வயது 32). தனியார் ஆன்லைன் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், நேற்று மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இன்று அதிகாலை, இரு வீடுகளுக்கு இடையே உள்ள சந்து ஒன்றில் சேர்மராஜ் விழுந்து கிடந்ததைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், இவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: காதல் மனைவியை கொலை செய்த கணவர்.. பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த பெண்.. நடந்தது என்ன?
உடம்பில் காயங்கள் ஏற்பட்டு சுய நினைவின்றி இருந்த அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.மேலும், நேற்று இரவு, மது போதையில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி, இரு வீடுகளுக்கிடையே உள்ள சந்தில் விழுந்து, உயிரிழந்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார், தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
சேர்மராஜிக்கு திருமணமாகி ஒன்றறை வருடமான நிலையில், 15 நாட்களுக்கு முன்னர் பிறந்த பச்சிளங்குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை வில்லிவாக்க கொள்ளை விவகாரத்தில் திடீர் திருப்பம்.. கூலிப்படையை ஏவிய உறவினர்கள் கைது..