ETV Bharat / state

திருச்செந்தூர் கடலில் முதியவர் தற்கொலை முயற்சி..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் குதித்து தற்கொலை முயற்சி செய்த முதியவரைக் கோயில் கடல் பக்தர் பாதுகாப்பு குழுவினர் மீட்டனர்.

முதியவர் தற்கொலை முயற்சி
முதியவர் தற்கொலை முயற்சி
author img

By

Published : Oct 20, 2022, 4:01 PM IST

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் முதியவர் ஒருவர் கை, கால்களில் பிளாஸ்டிக் கயிற்றினால் கட்டிக் கொண்டு குதித்துள்ளார்.

இதனைப் பார்த்த கோயில் கடல் பக்தர் பாதுகாப்பு குழுவினர் அவரை பத்திரமாக உயிருடன் மீட்டனர். அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அந்த முதியவர் ஈரோடு மாவட்டம் சிவகிரி பெரியார் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் (68) என்பது தெரியவந்தது.

இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், கார்த்திகேயன், சௌந்தரராஜன் என இரண்டு மகன்களும் உள்ளனர். நேற்று (அக். 19) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த இவர் குடும்பப் பிரச்சனை காரணமாகக் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகச் சொல்லப்படுகிறது. தற்கொலைக்கு முயன்ற முதியவரை போலீசார் முதியோர் இல்லத்திற்கு அனுப்புவதாகத் தெரிவித்தனர்.

முதியவர் தற்கொலை முயற்சி

இதையும் படிங்க: ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை திரையரங்கில் கண்டுகளித்த பள்ளி மாணாக்கர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.