தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் அருகே உள்ள எப்போதும் வென்றான் மேற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (34). இவர் கடந்த 15ம் தேதி இரவு தனது விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
இதன் பின்னர் மறுநாள் காலை பார்க்கும்போது அந்த இருசக்கர வாகனம் திருடுபோயுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் இது குறித்து காவல் நிலையத்தில் செந்தில்குமார் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார். பைக் திருடி சென்ற மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த போது திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த இளையராஜா (19),வாகனத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் 1,50,000 மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தையும் மீட்டு. இளையராஜாவை ஒட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைத்தனர்.இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புல்லட் வண்டியை திருட முயன்ற போது பெட்ரோல் இல்லாததால் மற்றொரு வண்டியில் உள்ள பெட்ரோலை திருடி வந்து புல்லட்டை எடுத்துச் சென்றது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: ஒட்டப்பிடாரம் அருகே திமுக பிரமுகரை அரிவாளால் வெட்டிய திமுகவினர் - நடந்தது என்ன?