ETV Bharat / state

தீவிரமடையும் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் மீதான விசாரணை - Ahamed athib

தூத்துக்குடி: சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த மாலத்தீவு முன்னாள் அதிபர் அகமது அதீப்பிடம் விசாரணை நடத்த சென்னை, டெல்லியைச் சேர்ந்த குடியுரிமை அலுவலர்கள் தூத்துக்குடி வந்தடைந்தனர்.

ahmed adeeb
author img

By

Published : Aug 2, 2019, 2:27 PM IST

மாலத்தீவு முன்னாள் துணை அதிபரான அகமது அதீப் தூத்துக்குடி கடற்பகுதி வழியாக சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்குள் நுழைய முயன்றார். அப்போது சரக்கு கப்பலில் வந்த அதீப்பை தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே வைத்து அவரை புலனாய்வு, உளவுத்துறை அலுவலர்கள் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அவர் குறித்த தகவல் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப்பிடம் விசாரணை நடத்துவதற்காக டெல்லி, சென்னை ஆகிய இடங்களிலிருந்து நான்கு பேர் கொண்ட இந்திய குடியுரிமை அலுவலர்கள் இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தடைந்தனர்.

தூத்துக்குடி வந்தடைந்த குடியுரிமை அலுவலர்கள்

சென்னையைச் சேர்ந்த வெளிநாட்டினர் பதிவுத் துறை மண்டல அலுவலர் சேவியர் தன்ராஜ், டெல்லியைச் சேர்ந்த குடியுரிமை அலுவலர்கள் ஆகியோர் முகத்தை மூடியபடி காரில் அதிவேகமாக சென்றனர்.

இந்தக் குழுவினர், அகமது அதீப்பிடம் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகே அவர் நாடு கடத்தப்படுவாரா அல்லது கைது செய்யப்படுவாரா என்பது தெரியவரும்.

Intro:இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த மாலத்தீவு முன்னாள் அதிபரிடம் விசாரணை நடத்த சென்னை, டெல்லியை சேர்ந்த குடியுரிமை அதிகாரிகள் தூத்துக்குடி வந்தனர்

Body:இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதிப்பிடம் விசாரணை நடத்துவதற்காக இந்திய குடியுரிமை அதிகாரிகள் டெல்லி மற்றும் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தனர். இதில் சென்னையை சேர்ந்த வெளிநாட்டினர் பதிவுத்துறை மண்டல அலுவலர் சேவியர் தன்ராஜ் மற்றும் டெல்லியைச் சேர்ந்த குடியுரிமை அதிகாரிகள் அடங்கிய 4 பேர் குழுவினர் முகத்தை மூடியபடி காரில் அதிவேகமாக சென்றனர்.

இந்தக் குழுவினர், கப்பலில் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்ட மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதிபரிடம் விசாரணை நடத்த உள்ளனர் இந்த விசாரணைக்கு பிறகே அவர் நாடு கடத்தப்படுவாரா அல்லது கைது செய்யப்படுவாரா என்பது தெரியவரும்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.