ETV Bharat / state

டிசம்பர் 27ஆம் தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் - தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு - லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் வில்லை, ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை குறிப்பிட்ட நிறுவனத்தில் வாங்க கட்டாயப்படுத்தும் தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

author img

By

Published : Dec 14, 2020, 7:22 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம்போல் பேட்டையிலுள்ள தனியார் விடுதியில் மாநில லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று (டிசம்பர் 14) நடைபெற்றது. அம்மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் ஜெகன் பெரியசாமி, செயலாளர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் குமாரசாமி, செயலாளர் வாஸ்னிலி மற்றும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, செங்கோட்டை,கன்னியாகுமரி, சங்கரன்கோவில், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

இதில், வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் வில்லை, ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை கட்டாயப்படுத்தும் தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் வரும் 27ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் குமாரசாமி கூறுகையில், "வேகக் கட்டுப்பாட்டு கருவியை குறிப்பிட்ட நிறுவனத்தில் வாங்குமாறு தமிழ்நாடு அரசு வற்புறுத்தி வருகிறது. ஆனால் மதுரை உயர் நீதிமன்றம் எந்த நிறுவனத்தில் வேண்டுமானாலும் கட்டுப்பாட்டுக் கருவியை வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அதனை லாரி உரிமையாளர்கள் பின்பற்ற அரசு அனுமதிக்க வேண்டும். எனவே இதனை வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி காலை 6 மணி முதல் தமிழ்நாட்டில் நான்கரை லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. இதனால் ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: திட்டமிட்டப்படி டிசம்பர் 27ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் - மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.