தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனாரூத்து சாலையில், கொய்யாப்பழ வியாபாரி முத்துப்பாண்டி (32) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோ (டாட்டா ஏஸ்) முத்துப்பாண்டி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து ஆட்டோவை ஓட்டி வந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த கயத்தாறு காவல் துறையினர், முத்துப்பாண்டியின் உடலைக் கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். முத்துப்பாண்டி லோடு ஆட்டோ ஏற்றி கொலைசெய்யப்பட்டாரா, அல்லது இது விபத்துதானா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குளத்தில் மிதந்த ஆண் உடல்: கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை!