ETV Bharat / state

"டிடிஎஃப் வாசன் வாகனத்தை அருங்காட்சியகத்தில் வைக்கலாம்” - வழக்கறிஞர் கூறுவது என்ன? - தூத்துக்குடி

YouTuber TTF Vasan accident issue: யூடியூபர் டிடிஎஃப் வாசன் விபத்து வழக்கில், அவரது வாகனத்தை எரிக்கலாம் என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. ஆனால், அதற்கு பதிலாக அரசினுடைய மியூசியத்தில் வைத்து இந்த வாகனம் தடை செய்யப்பட்டது, இது போன்ற வாகனத்தை இளைஞர்கள் ஓட்டக்கூடாது என விழிப்புணர்வு தரலாம் என்று மக்கள் மேம்பாட்டு கழகத்தின் நிறுவனத் தலைவரும், வழக்கறிஞருமான அதிசய குமார் தெரிவித்துள்ளார்.

YouTuber TTF Vasan accident issue
YouTuber TTF Vasan accident issue
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 11:27 AM IST

"டிடிஎஃப் வாசன் வாகனத்தை எரிப்பதற்குப் பதில், மியூசியத்தில் வைத்து விழிப்புணர்வு தரலாம்" - வழக்கறிஞர் கூறியது என்ன?

தூத்துக்குடி: சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை ஓட்டி, விபத்துக்குள்ளான சம்பவத்திற்காக யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி அவரை கைது செய்தனர்.

பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிடிஎஃப் வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் பல முறை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜாமீன் கேட்டு டிடிஎஃப் வாசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், சாலையில் மிதமான வேகத்தில் வந்த நிலையில், கால்நடைகள் சாலையை கடந்ததால் திடீரென பிரேக் போட வேண்டிய கட்டாயம் எனவும், அதனால் வாகனத்தின் சக்கரம் தூக்கியதில் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், பிரேக் போடாமல் இருந்திருந்தால் கால்நடைகள் மற்றும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது விபத்தில் காயமடைந்துள்ளதால், சிறையில் உரிய சிகிச்சை பெற முடியவில்லை. புண்கள் மோசமாகி வருவதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. ஆகையால், ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், அதில் தான் அப்பாவி என்றும், எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், யூடியூபில் 45 லட்சம் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கில், ரூ.2 முதல் 4 லட்சம் வரையிலான பாதுகாப்பு உடை அணிந்ததால், அவர் இந்த விபத்தில் உயிர் தப்பி இருக்கலாம்.

ஆனால் இதைப் பார்த்து மற்ற இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடம் ரூ.2 லட்சம் விலையுள்ள பைக்கை வாங்கிக் கேட்டு, இது போன்ற அபாயகரமான சாகசங்களில் ஈடுபடுவதாகவும், சிலர் கொள்ளைச் சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, “விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களைத் தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள வாசனின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும்.

அவர் தொடர்ந்து நீதிமன்றக் காவலிலேயே நீடிக்கட்டும்” எனக் கூறி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அவரது யூடியூப் தளத்தை மூடிவிட்டு, பைக்கை எரித்து விடலாம் எனவும் கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில், இது குறித்து தூத்துக்குடி மக்கள் மேம்பாட்டு கழகத்தின் நிறுவனத் தலைவரும், வழக்கறிஞருமான அதிசய குமார் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், பல்வேறு நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது. இதில், யூடியூபர் டிடிஎஃப் வாசன் வாகனம் எரிக்கப்பட்ட வேண்டும் என்று சுட்டிக் காட்டபட்டுள்ளது. இது சமூகத்தின் மீதுள்ள அக்கறையில், இளைஞர்கள் மீதுள்ள அக்கறையில் அளவுக்கு அதிகமான கோபத்தில் இந்த தீர்ப்பை எழுதியுள்ளதாகத் தெரிகிறது.

மேலும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தகுந்த தீர்ப்பாகும். ஆனால், இந்த வாகனம் எரிக்கப்பட்ட வேண்டும் என்பதற்குப் பதிலாக, அரசினுடைய மியூசியத்தில் வைத்து, அதற்கு கீழ் நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் இந்த வாகனம் தடை செய்யப்பட்டதாகவும், இது போன்ற வாகனத்தை இளைஞர்கள் ஓட்டக்கூடாது என்ற செய்தியை விளம்பரமாகவும், முன்னுதாரணமாகவும் வைக்க வேண்டும்.

அது மட்டுமல்ல, அவருடைய வாகன ஓட்டுநர் உரிமம் வாழ்நாள் முழுவதும் ரத்து செய்யப்பட வேண்டும். இளைஞர்கள் இதனைப் பார்த்து, இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதிவேகமாக ஓட்டுவதற்கு சாலை வசதி நம் நாட்டில் இல்லை. நம் நாட்டில் அது போன்ற அதிவேகமாக ஓட்ட முடியாது. ஆகவே, அரசும் இதற்கான திட்டங்களை வகுத்து அரசாணைகளை பிறப்பிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரே நாளில் அடுத்தடுத்து 5 இடங்களில் செயின் பறிப்பு; வழிப்பறி குருவிகள் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.