தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பின் சங்க நிர்வாகிகள், "லாரிகளில் தீப்பெட்டி பண்டல்களை ஏற்றி, இறக்க கொடுக்கப்படும் கூலியை இதுவரை லாரி உரிமையாளர்கள்தான் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கிவந்தனர்.
![matchbox lorry](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-07-kovilpatti-lorry-association-strike-vis-script-7204870_23042021224512_2304f_1619198112_1003.jpg)
ஒரு லாரியில் லோடு ஏற்ற ஏழாயிரத்திலிருந்து எட்டாயிரம் ரூபாய்வரை இருக்கும் நிலையில், தற்போது சுமைதூக்கும் தொழிலாளர்கள் இந்தக் கூலியை 30 விழுக்காடு உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனக் கேட்கின்றனர்.
கரோனா தொற்று காரணமாக முன்புபோல் லோடுகள் இல்லை. மேலும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துவருகிறோம்.
எனவே ஜூன் 1ஆம் தேதியிலிருந்து தீப்பெட்டி பண்டல்களை லாரியில் ஏற்றி, இறக்க கொடுக்கப்படும், கூலியை தீப்பெட்டி உற்பத்தியாளர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
![matchbox lorry](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-07-kovilpatti-lorry-association-strike-vis-script-7204870_23042021224512_2304f_1619198112_566.jpg)
இதை வலியுறுத்தி ஏப்ரல் 21ஆம் தேதிமுதல் லாரிகளில் தீப்பெட்டி பண்டல்களை ஏற்ற மாட்டோம் எனக்கூறி தீப்பெட்டி லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில் தீப்பெட்டி லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக கன்டெய்னர் லாரிகளும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுவருகின்றன.
அதன்படி எந்த ஒரு எக்ஸ்போர்ட் கன்டெய்னர்களும் கோவில்பட்டியில் லோடு ஏற்றுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தூத்துக்குடி மாவட்ட கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் எங்கள் கோரிக்கையை ஏற்கும்வரை போராட்டம் தொடரும். இப்பிரச்னைக்குத் தீர்வுகாண மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்" என்றனர்.