ETV Bharat / state

கோவில்பட்டி நீதிபதிக்குக் கரோனா தொற்று உறுதி - corona positive

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே நீதிபதி , அவரது மனைவிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

author img

By

Published : May 14, 2021, 11:11 PM IST

நாடு முழுவதும் கரோனா தொற்று இரண்டாம் அலையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உரிமையியல், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணகுமார், அவரது மனைவி ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இதனையடுத்து அந்தப் பகுதியில் கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விளாத்திகுளம் காவல்துறை, பேரூராட்சி, வருவாய்த்துறை சார்பில் பல்வேறு இடங்களில் கபசுரக் குடிநீர் வழங்கல், கரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் அலுவலர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் - முதலமைச்சரிடம் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.