கோவில்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாமை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார். இதில் 100க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்கள் கலந்துகொண்டன.
அப்போது கனிமொழி பேசுகையில், மாணவர்கள், இளைஞர்கள் தங்களது படிப்பிற்கு எந்த நிறுவனம் வேலை தரும் என்பதைப் புரிந்துகொண்டு நேர்முகத் தேர்விற்குச் செல்லவேண்டும், பல நேரங்களில் என்ன வாய்ப்பு இருக்கிறது என்று தெரியமால் தவற விட்டுவிடுகிறோம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சில தினங்களுக்கு முன்பு செர்பியா நாட்டிற்குச் சென்றுவிட்டு இந்தியாவிற்கு திரும்புவதற்காக விமான நிலையத்தில் இருந்தபோது, இந்திய மாணவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்து. அதில் வட இந்திய மாணவர்கள்தான் அதிகமாக இருந்தனர் என்றார். நமது பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் இல்லை, குஜராத், ஹரியானா,டெல்லி போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு படிக்கின்றனர் என்று கூறினார். எப்படி இவ்வளவு இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கின்றனர் என்று கேட்டபோது, அங்கு கல்விக் கட்டணம் மிகவும் குறைவு, அங்குள்ள அரசு கல்லூரிகளில் பயில வாய்ப்பு கிடைக்கிறது என்று மாணவர்கள் கூறியதாக கனிமொழி தெரிவித்தார்.
நம் மாணவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் குறித்த செய்திகள் வந்து சேருவதில்லை, நாம் மட்டும் ஏன் இந்த வாய்ப்புகளை தவற விட்டுவிடுகிறோம் என்ற வலி அப்போது உருவானது என்று பேசிய கனிமொழி, கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை நீங்கள் தவறவிடமால் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார். தூத்துக்குடி எம்.எல்.ஏ. கீதாஜீவனும் இதில் பங்கேற்றார்.
இதையும் படிங்க: 'உங்கள் மீது எப்படி காதல் கொண்டேன் என தெரியவில்லை' - சன்னி லியோன்