ETV Bharat / state

‘ஸ்டாலினை விமர்சிக்க எடப்பாடிக்கு தகுதியில்லை’ - கனிமொழி காட்டம்!

தூத்துக்குடி: திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை என அக்கட்சியின் மாநிலங்களவைக் குழு தலைவர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

கனிமொழி
author img

By

Published : May 8, 2019, 2:48 PM IST

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட டி.சவேரியார்புரத்தில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், திமுக மாநில மகளிரணி செயலாளரும், எம்.பியுமான கனிமொழி கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்து செயல்படுகிறது என்ற பயம் உள்ளது. தோல்வி பயத்தால் தான் ஆளும் கட்சி தேர்தல் ஆணையம் மூலம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். முதலமைச்சராக அல்ல அமைச்சராக கூட கனவு காணத் தகுதியில்லாதவர் எல்லாம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ளார். ஸ்டாலினை விமர்சிக்க அவருக்கு தகுதியில்லை. விரைவில் தமிழ்நாடு மக்கள் ஸ்டாலினை முதலமைச்சராக்கி காட்டுவார்கள். தெலங்கானா முதலமைச்சர் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கலாம். ஆனால், ஸ்டாலின் தனது முடிவில் தெளிவாக உள்ளார்", என்றார்.

தூத்துக்குடியில் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பு

தூத்துக்குடி

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.சவேரியார்புரத்தில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா நடந்தது. இதில் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி கலந்துகொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,
தொடர்ந்து தேர்தல் ஆணையம் மீது நாடுதழுவிய அளவில் ஆளுங்கட்சியுடன் சேர்ந்து செயல்படுகிறதோ என்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுவருகிறது. ஆணையத்தின் செயல்பாடுகள் மீது பல கேள்விகள் எழுப்பப்பட்டுவருகிறது. நேற்றைய தினம் வேட்பாளர்களுக்கு சொல்லிய பின்னர் அந்த பணியை செய்தியிருக்கலாம். திடீரென எடுக்கபட கூடிய நிலையில் அவநம்பிக்கையை உருவாக்கியுள்ளது. அதனை அவர்கள் தெளிவுப்படுத்தவேண்டும்.

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியுடன் கூட்டணிவைத்துதான் செயல்படுகிறது என்ற பயம் எங்களுக்கு உள்ளது.

ஆளும் கட்சிக்கு தோல்வி பயமுள்ளதால் தான் தேர்தல் ஆணையம் மூலம் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறார்கள்.
தெலுங்கான முதல்வர் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கலாம். ஆனால் ஸ்டாலின் தனது முடிவில் தெளிவுடன் உள்ளார்.
முதல்வராக அல்ல அமைச்சராக கூட கனவு கூட முடியாதவர் தான் தமிழக முதல்வராக நாம் கண்டுள்ளோம். ஸ்டாலினை விமர்சிக்க அவருக்கு தகுதியில்லை. விரைவில் தமிழகம் ஸ்டாலினை முதல்வராக்கி காட்டுவோம் என்றார்.

Visual FTP.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.