FENGAL Cyclone: இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நேரலை.. - இந்திய வானிலை ஆய்வு மையம்
🎬 Watch Now: Feature Video
Published : Nov 26, 2024, 3:14 PM IST
|Updated : Nov 26, 2024, 3:30 PM IST
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று மாலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது தமிழக கடற்கரை பகுதி நோக்கி நகர்ந்து வருவதாகவும், நாளை சூறாவளிப்புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதற்கிடையே, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நவம்பர் 26, 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்னிந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயரிடும் முறைப்படி, இந்த முறை சவுதி அரேபியா நாடு பரிந்துரைத்த ‘ஃபெங்கல்’ (FENGAL Cyclone) என்ற பெயர் இந்த புயலுக்கு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து வரும் நேரலை காட்சிகளை இங்கு காணலாம்.
Last Updated : Nov 26, 2024, 3:30 PM IST