ETV Bharat / state

குழந்தைகள் எதற்கெல்லாம் பயப்படுகிறார்களோ அதுவும் சீண்டல்கள்தான்; அமைச்சர் அன்பில் மகேஷ்

பாலியல் சீண்டல்கள் மட்டுமல்ல, குழந்தைகள் எதற்கெல்லாம் பயப்படுகிறார்களோ அதுவும் சீண்டல்கள்தான் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி (Credit - @Anbil_Mahesh X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2024, 3:34 PM IST

சென்னை: சென்னை எழும்பூரில் இன்று குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைத் தடுப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு வாரம்

அப்போது பேசியவர், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் குறித்து ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டு இருக்கிறோம். குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரம் நவம்பர் 25 முதல் நவம்பர் 29 வரை அனைத்து வகை பள்ளிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுக்கும் வகையில் 14417, 1098 ஆகிய எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்களுக்கு சமூக நலத்துறை மூலம் 181 விழிப்புணர்வு எண் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் எதிர்பாராத வகையில் சில சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

18 வயதிற்கு கீழ் உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாக்கின்ற பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. பல்வேறு வகையான துன்புறுத்தல்களிலிருந்து அவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் நிலையில், மாணவர்களின் உரிமையையும், சுதந்திரத்தையும் பாதுகாத்திட வேண்டும். வருங்காலங்களில் நவம்பர் 17 முதல் 22 ஆம் தேதி வரை குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படும்.

ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் சீண்டல்கள்

பள்ளி வளாகத்திற்குள் மாணவ, மாணவியர்களுக்கு கருத்துரையாற்ற வருபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும், எப்படிப்பட்ட கருத்துக்களை வழங்க வேண்டும் என்பது குறித்து விரிவாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் காலை வழிப்பாட்டு நேரங்களில் பாலியல் துன்புறுத்தல் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு புரியும் வகையில் தெரிவிக்க வேண்டும். பாலியல் சீண்டல்கள் மட்டுமல்ல; குழந்தைகள் எதற்கெல்லாம் பயப்படுகிறார்களோ அதுவும் சீண்டல்கள்தான்.

இதையும் படிங்க: மாணவிகளிடம் ஒழுக்கக் கேடாக நடக்கும் ஆசிரியர் சான்றிதழ்கள் ரத்து! பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு..!

மாணவர் மனசு பெட்டி

பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது ஆண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கு நிகரான பாலியல் சீண்டல்கள் நடைபெறுவது ஆய்வுகளில் தெரிகிறது. செய்திகளை விழிப்புணர்வுக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு Good Touch, Bad Touch சொல்லி தர வேண்டும். தேன் சிட்டு, புது ஊஞ்சல் போன்ற இதழ்களை வழங்கி வருகிறோம். பள்ளி அளவில் ''மாணவர் மனசு'' என்ற புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.

குழந்தைகளின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளை மாணவர் மனசு பெட்டியில் செலுத்துகின்றனர். அவர்கள் அவர்களின் மொழியில் எழுதி இருப்பார்கள். சில மாணவர்கள் பெயர் எழுதாமல் விட்டிருந்தாலும் அதனை எடுத்து காலை வணக்க கூட்டத்தின் பாேது நாங்கள் இருக்கிறோம் என கூற வேண்டும். மாணவர்கள் சுதந்திரமாக கருத்துக்களையும் தெரிவிக்கலாம் என்ற எண்ணத்தை ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும்.

கார்ட்டூன் வடிவில் குறும்படம்

பள்ளிகளில் சிறார் திரைப்படம் திரையிடும் போது கார்ட்டூன் வடிவிலும், திரைப்படம் வடிவிலும் குறும்படங்கள் தயாரித்து அதன் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், குழந்தைகள் திரைப்படம் தயாரிப்பதற்கான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நமது செயல்பாடும் அமைய வேண்டும்'' என அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, போக்சோ மட்டுமல்லாது POSH சட்டத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். (Prevention of sexual harassment for women at work place) .பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது ஆண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களும் போக்சோ சட்டத்தில் கீழ்தான் வரும். பெண்களுக்கு பெண்களாலும், ஆண்களுக்கு ஆண்களாலும் கூட இந்த பாலியல் சீண்டல்கள் நடைபெறும்'' என பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.