தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாவட்டம் தருவை குளத்தில் நடைபெறும் பெண்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வேலூர் வெற்றி தாமதமாக வருவதற்கு காரணம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். திமுகவுக்கு வெற்றி கிடையாது என பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த கனிமொழி, தமிழ்நாட்டில் பாஜக ஏதாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பின், தமிழிசை சவுந்தரராஜன் இப்படி கூறலாம் என்றார்.
மேலும், காங்கிரசுடன் திமுகவுக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. தோல்வி இல்லையென்று கூறுவதற்கான காரணங்களை தேடுவதும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் வெற்றி என்பது யாரும் மறுக்கமுடியாத ஒன்று. அதிமுகவின் படிப்படியான தோல்விகளை கண்கூடாக அமைச்சர் ஜெயக்குமார் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் என்றும் விமர்சித்தார்.