மக்களவைத் தொகுதி உறுப்பினரான கனிமொழி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் தொடர்ந்து மக்கள் வலுவாக எதிர்த்துவருகின்றனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் இத்திட்டத்தை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும்கூட அரசு மக்களுடைய கருத்துகள் அவசியமில்லை என்று கூறியிருக்கிறது.
சுற்றுச்சூழலைப் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை என்ற ஒரு முடிவை எடுத்து அரசு அறிக்கை வெளியிட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. விவசாயிகளையும் விவசாயத்தையும் முற்றிலுமாகத் தமிழ்நாட்டில் அழித்துவிடக்கூடிய திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து ஏன் கொண்டுவருகிறது என்பது புரியவில்லை. ஹைட்ரோகார்பன் திட்டம் தமிழ்நாட்டிற்கு எதிரான நடவடிக்கை.
நாட்டையே தனியார்மயம் ஆக்குவதற்கான முயற்சிகள் போய்க்கொண்டிருக்கின்றன. அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களையும் மத்திய அரசு தனியார் வசம் ஒப்படைக்கும் சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பல லட்சக்கணக்கானவர்கள் வேலைசெய்யக்கூடிய ரயில்வே துறையை தனியார்மயமாக்கினால் ரயில்வே தொழிலாளர்களின் வேலைக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்படும்” என்றார்.
இதையும் படிங்க: 'புதிய விஞ்ஞானியாக அமைச்சர் ஜெயக்குமார் உருவெடுத்துள்ளார்' - கலகலத்த கே.எஸ். அழகிரி