ETV Bharat / state

"மாலத்தீவோ.. இலங்கையோ மீனவர்களுடன் கலந்து பேசி மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும்" - கனிமொழி எம்.பி! - 12 Indian fishermen arrested in Maldives

12 Indian fishermen arrested in Maldives: மாலத்தீவில் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 12 இந்திய மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 3:59 PM IST

12 மீனவர்களை விடுதலை செய்யக் கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம்

தூத்துக்குடி: புயல் எச்சரிக்கையால் பாதுகாப்புக்காக மாலத்தீவு கடற்கரையோரம் கரை ஒதுங்கிய தூத்துக்குடியை சேர்ந்த 12 மீனவர்களை மாலத்தீவு கடற்படை கைது செய்ததாக கூறப்படும் நிலையில், அவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாக கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்குட்பட்ட 4 இடங்களில் மொத்தம் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 4 இறகுப் பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்கப்பட்டன. பழைய மாநகராட்சி அருகே உள்ள பெரிய காட்டன் ரோட்டில் புதியதாக அமைந்துள்ள உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற இதற்கான திறப்பு விழா நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்.

12 மீனவர்கள் விடுதலைக்காக மத்திய அரசுக்கு கடிதம்: பின்னர், அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "புயல் வரக்கூடிய அபாயம் இருந்த காரணத்தினால் தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் மாலத்தீவு பகுதிக்கு சென்று விட்டனர். அப்படி சென்ற மீனவர்கள் மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். விரைவிலேயே அந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு மறுபடியும் அவர்கள் தூத்துக்குடிக்கு வந்து சேரக்கூடிய அளவில் மத்திய அரசு உதவிகள் செய்து மீட்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகிறேன்.

மேலும், இலங்கைக்கும் தமிழகத்திற்கும் எடுத்துக் கொண்டால் அங்கே இருக்கக் கூடிய மீனவ அமைப்புகள் நம்முடைய மீனவர்களுடன் கலந்து பேசி அதற்கு ஒரு தீர்வை காண வேண்டும். அந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறாத சூழ்நிலையில் தான் இருக்கிறது. அதை மறுபடியும் தொடங்கினாலே இலங்கைக்கும் நமக்கும் இருக்கக்கூடிய எல்லை தாண்டும் பிரச்சினையும் தீர்வுக்கு வரும்.

ஆனால் ஒவ்வொரு இடத்திலேயும் மீனவர்கள் கைது செய்யப்படுவது மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு அவர்கள் விடுதலை செய்யப்படுவது படகுகளைப் பிடித்துக் கொள்வது தொடர் கதையாக மாறியுள்ளது. ஆகவே இதற்கு நிரந்தர தீர்வு மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்" என்று கனிமொழி எம்.பி கூறினார்.

இதையும் படிங்க: மாலத்தீவில் 12 இந்தியர்கள் கைது; மாலத்தீவுக்கும் இந்திய அரசுக்கும் பிரிவினையா? இதன் வெளிப்பாடே மீனவர்கள் கைதா? மீனவர் கூறுவது என்ன..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.