தூத்துக்குடியில் மின்வாரிய தலைவரின் தொழிலாளர் விரோத, தொழிற்சங்க விரோதப் போக்கினை கண்டித்து, அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தர்ணா போராட்டம் நடைபெற்றதால் தூத்துக்குடி மாவட்டத்தில் மின்வாரிய பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.
தூத்துக்குடி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்நாடு மின் வாரிய தலைவர் தொழிற்சங்கங்களோடு பேசுவதோ, தொழிற்சங்க தலைவர்களை சந்திப்பதோ கிடையாது இந்த நிலை மாற்றப்பட வேண்டும், துணை மின் நிலையங்களை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கக்கூடாது, துணை மின் நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்பாமல் ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்றவர்களை கொண்டு நிரப்புவதை கைவிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி பேசுகையில், கண்துடைப்பிற்கான காரணங்களை சொல்லி அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் செயலில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. திமுக தனியார் மயமாக்கலை என்றும் ஏற்றுக்கொள்ளாது. நேரடியாக தனியாருக்கு கொடுக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாக்கி வருகின்றனர் என குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: 'தனியார் துறை ரயில்கள் 2023க்குள் இயக்கப்படும்'-ரயில்வே அமைச்சகம்!