ETV Bharat / state

அதிமுக அரசு எல்லா இடத்திலும் ஊழல் செய்துவருகிறது - கனிமொழி குற்றச்சாட்டு! - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி: அதிமுக அரசு எல்லா இடத்திலும் ஊழல் செய்துவருகிறது. எந்த வளர்ச்சி திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லைஎன திமுக எம்பி கனிமொழி பேசியுள்ளார்.

தூத்துக்குடி
தூத்துக்குடி
author img

By

Published : Jan 21, 2021, 6:53 PM IST

தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதி திமுக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. தூத்துக்குடி எம்எல்ஏ கீதாஜீவன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி எம்பி கனிமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், "நடந்து முடிந்த பல்வேறு சட்டப்பேரவை தேர்தலுக்கும் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. தமிழ்நாட்டின் மிகப்பெரும் ஆளுமைகளாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நம்மிடம் இல்லாத ஒரு தேர்தலை நாம் சந்திக்கின்றோம்.

திமுக எம்பி கனிமொழி உரை

தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசு எல்லா இடத்திலும் ஊழல் செய்துவருகிறது. எந்த வளர்ச்சி திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுகவினர் தமிழ்நாட்டை மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களிடம் அடகு வைத்துள்ளனர். இந்த தேர்தலில் நாம் தமிழ்நாட்டை மீட்டு எடுக்கவேண்டும்.

சட்டப்பேரவை தேர்தலில் இவர்கள் நடத்தும் சூழ்ச்சிகள் பொய் பரப்புரைகளை நாம் முறியடித்து விழிப்போடு பணியாற்ற வேண்டும். தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லவேண்டிய கடமை நமக்கு உள்ளது. மறுபடியும் திமுக தலைவர் தலைமையில் கலைஞர் ஆட்சியை உருவாக்கி காட்டுவோம்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.