ETV Bharat / state

எங்களுக்கு எப்போதும் இருமொழிக் கொள்கை தான் -  அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: ஆட்சியாக இருந்தாலும், கட்சியாக இருந்தாலும் எங்களுக்கு இருமொழிக் கொள்கைதான் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இமானுவேல் சேகரன்
இமானுவேல் சேகரன்
author img

By

Published : Sep 11, 2020, 7:45 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முடுக்கலாங்குளம் கிராமத்தில் உள்ள இம்மானுவேல் சேகரின் 63வது குருபூஜை விழா நடைபெற்றது.
இம்மானுவேல் சேகரன் திருவுருவசிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின் கடம்பூர் ராஜூ கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்ட பணிகளில் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.
இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, வருவாய் கோட்டாட்சியர் விஜயா, அரசு அலுவலர்கள், கட்சிப் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆட்சியாக இருந்தாலும், கட்சியாக இருந்தாலும் எங்களுக்கு இருமொழிக் கொள்கை தான், அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
மொழி பிரச்சினையில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது மக்களுக்கு தெரியும். டீ சர்ட் ட்ரெண்டிங் மூலமாக திமுக உண்மையை மறைக்க பார்ப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மொழி தொடர்பான கொள்கை, அதன் நிலைப்பாட்டில் திமுகவினர் எந்த அளவில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். எங்கள் கொள்கைகள் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன். திரையரங்குகள் திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அனுப்பவில்லை.
மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் சொன்னாலும் இங்குள்ள நிலைமைகளை அறிந்து, அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து திரையரங்கு திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்.
கரோனா ஊரடங்கு காலத்திலும் திரை துறையினருக்கு போஸ்ட் புரோடக்சன் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. 75 பேருடன் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டார்கள் அதற்கும் அரசு அனுமதி வழங்கியது.
சின்னத்திரை படப்பிடிப்புக்கும் அரசு அனுமதி வழங்கியது. கரோனா ஊரடங்கு போது திரைப்பட நலவாரியத்தில் பதிவு செய்திருந்த 27ஆயிரத்து 850 பேருக்கு ரூ2 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
திரையரங்கு திறக்கப்படும் போது மக்கள் தகுந்த இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கஷ்டம் ஏற்படும். மருத்துவ குழுவின் அறிக்கை பெற்ற பின்னர் திரையரங்கு திறப்பது பற்றி உரிய நேரத்தில் முதலமைச்சர் முடிவு எடுப்பார்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.