தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சிவஞானபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கரோனா குறித்து பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு செய்துவருகிறார். விரைவில் தூத்துக்குடி வருகை தந்து ஆய்வு மேற்கொள்வார். நம்மாவட்டத்தில்தான் கரோனா இறப்பு விகிதம் மிகக்குறைந்த அளவில் உள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
திமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவார்கள் என மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். மு.க. ஸ்டாலின் கனிமொழியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. கனிமொழி மு.க. ஸ்டாலினை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. இருவருக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது.
ஆகையால்தான், கனிமொழிக்குப் போட்டியாக உதயநிதி ஸ்டாலினை ஸ்டாலின் முன்னிறுத்தி வருகிறார். இதனால்தான் வி.பி. துரைசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் கு.க. செல்வம் போன்றோர் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணி உடையும். திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தல் நேரத்தில் எங்களுடன் கூட்டணி குறித்து பேசுவார்கள்" என்றார்.
இதையும் படிங்க: வெடிமருந்து குடோன்களின் பாதுகாப்பு குறித்து தூத்துக்குடி எஸ்.பி., ஆய்வு