ETV Bharat / state

நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் தலையீடு இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு - kadambur raju

தூத்துக்குடி: நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் தலையீடு இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

kadambur raju
author img

By

Published : Jun 21, 2019, 1:33 PM IST

தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் தேவை, குடிநீர் சிக்கன நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீர் சேமிப்பு விழிப்புணர்வு குறும்படம் வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு செய்தி; விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குடிநீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு குருந்தகட்டை வெளியிட்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ”தூத்துக்குடி மாவட்டத்திற்கு, மறைந்த குரூஸ் பெர்னாண்டஸ்தான் முதன்முதலில் முதலாவது பைப்லைன் திட்டம் மூலமாக குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். அதைத் தொடர்ந்து அதிமுக அரசுதான் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இரண்டாவது, மூன்றாவது, நான்காவது குடிநீர் பைப்லைன் திட்டங்களை கொண்டு வந்து தூத்துக்குடி மாவட்ட மக்களின் தண்ணீர் தேவையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுத்தது.

அதிமுக அரசு காலத்தில்தான் 282.44 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் தேவைக்காக வல்லநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றுப் படுகையிலிருந்து நீர் உறிஞ்சப்பட்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு தொலைநோக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தற்போது 50 எம்.எல்.டி. அளவு தண்ணீர் தேவை உள்ள நிலையில் 30 எம்.எல்.டி. அளவு தண்ணீர் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது. மீதம் குடிநீருக்கு தேவையாக உள்ள 20 எம்.எல்.டி. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்த நிலையில் குடிநீர் பற்றாக்குறை என்று வரும்போது அதில் தகுந்த ஆலோசனைகளை எடுத்து கூறுவதுதான் நல்ல எதிர்க்கட்சியாகும். ஆனால் திமுகவினர் தண்ணீர் பிரச்னையை அரசியல் ஆதாயமாக்க நினைத்து போராட்டம் நடத்துகின்றனர். அதிமுக அரசு மீது குறை கூறுவதையே ஸ்டாலின் குறியாக கொண்டுள்ளார்.

இந்நேரத்தில் அவர்கள் நடத்துகிற ஆர்ப்பாட்டங்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆக்கப்பூர்வமான பணிகளை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் தலையீடு என்பது இல்லை. நடிகர் சங்கம் என்பது தனி ஒரு அமைப்பு. எனவே அதில் அரசியல் தலையீடுக்கு வாய்ப்புகள் இல்லை. திரைப்படத்துக்கு ஏதாவது பிரச்னை எனில் அதில் அரசு தலையிட்டு தீர்த்துவைக்கும்” என்றார்.

Intro:நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் தலையீடு இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டிBody:

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில், குடிநீர் தேவை மற்றும் குடிநீர் சிக்கன நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீர் சேமிப்பு விழிப்புணர்வு குறும்படம் வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.
இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குடிநீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு குருந்தகட்டை வெளிட்டு பேசினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
தூத்துக்குடி மாவட்டத்திற்கு, மறைந்த குரூஸ் பெர்னாண்டஸ் தான் முதன்முதலில் முதலாவது பைப்லைன் திட்டம் மூலமாக குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். அதை தொடர்ந்து அதிமுக அரசுதான் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2-வது, 3-வது மற்றும் 4-வது குடிநீர் பைப்லைன் திட்டங்களை கொண்டு வந்து தூத்துக்குடி மாவட்ட மக்களின் தண்ணீர் தேவையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுத்தது. அதிமுக அரசு காலத்தில் தான் 282.44 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் தேவைக்காக வல்லநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றுப் படுகையில் இருந்து நீர் உறிஞ்சப்பட்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு தொலைநோக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது 50 எம்.எல்.டி. அளவு தண்ணீர் தேவை உள்ள நிலையில் 30எம்.எல்.டி. அளவு தண்ணீர் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மீதம் குடிநீர் தேவையாக உள்ள 20 எம்.எல்.டி. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தமிழக அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை என்று வரும் போது அதில் தகுந்த ஆலோசனைகளை எடுத்து கூறுவது தான் நல்ல எதிர்க்கட்சியாகும். ஆனால் திமுகவினர் தண்ணீர் பிரச்சினையை அரசியல் ஆதாயமாக்க நினைத்து போராட்டம் நடத்துகின்றனர். அதிமுக அரசு மீது குறை கூறுவதே குறை கூறுவதையே ஸ்டாலின் குறியாக கொண்டுள்ளார். இந்நேரத்தில் அவர்கள் நடத்துகிற ஆர்ப்பாட்டங்களையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஆக்கபூர்வமான பணிகளை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நடிகர் சங்க தேர்தலில் அரசியல் தலையீடு என்பது இல்லை. நடிகர் சங்கம் என்பது தனி ஒரு அமைப்பு. எனவே அதில் அரசியல் தலையீடுக்கு வாய்ப்புகள் இல்லை. திரைப்படத்துக்கு ஏதாவது பிரச்சனை எனில் அதில் அரசு தலையிட்டு தீர்வு தீர்த்துவைக்கும். 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட ஆலந்தலை நீர் சுத்திகரிப்பு குடிநீர் மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடிய நிலையில் உள்ளது. ஆகவே அத்திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது. மேலும் அறிவிக்கப்படாத திட்டமாக வைப்பாறு பகுதியிலும் குடிநீர் மேலாண்மை செயல்படுத்துவதற்கு ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள்‌ சண்முகநாதன், சின்னப்பன், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.