சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் “தேவேந்திரகுல வேளாளர் அரசாணையை அரசு வெளியிட வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட ஐவர் குழுவுடன் வருகிற 16ஆம் தேதி நாங்கள் ஆலோசனை நடத்தவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தேவேந்திரகுல வேளாளர் அரசாணை என்பதுதான் எங்களது முக்கிய நோக்கு. அது கிடைத்த பின்னரே ஆதரவா? இல்லையா? என்பதை எங்களால் சொல்ல முடியும் அதுவரை அமைதி காப்பேன் என ஜான் பாண்டியன் தெரிவித்தார்.