ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும்: கிராமத்தினர் மனு! - ஸ்டெர்லைட் ஆலை சதியை முறியடிக்க வேண்டும்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் கிராமத்தினர் சிலர் மனு அளித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை
author img

By

Published : Jul 29, 2019, 5:39 PM IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தெற்கு வீரபாண்டியபுரம், வடக்கு சங்கரபேரி, சாமிநத்தம் உட்பட பல்வேறு சுற்றுவட்டார கிராமப் பகுதிகளிலிருந்து வந்திருந்த அசோக் குமார், இஸ்ரவேல், இருதயராஜ் மற்றும் கிராமத்தினர் சிலர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர்.

மனு கொடுக்க வந்த கிராமத்தினர்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ”ஓட்டப்பிடாரம் பகுதியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆலை மூடப்பட்டதால் எங்களது பகுதியில் பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் வழங்கப்பட்டுவந்த நலத்திட்ட உதவிகளான கல்வி உதவித்தொகை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் மக்களுக்குச் சென்று சேரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது” என்றனர்.

Intro:தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் கிராம இளைஞர்கள் மனு
Body:
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தெற்கு வீரபாண்டியபுரம், வடக்கு சங்கரபேரி, சாமிநத்தம் உள்பட பல்வேறு சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து வந்திருந்த கிராம இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி கோரிக்கை மனு சமர்ப்பித்தனர்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் அளித்த பேட்டியில்
ஓட்டப்பிடாரம் தாலுகா பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆலை மூடப்பட்டதால் எங்களது பகுதியில் பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் வழங்கப்பட்டு வந்த நலத்திட்ட உதவிகளான கல்வி உதவித்தொகை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் மக்களுக்கு சென்று சேரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆகவே பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளையும், வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பேட்டி:- அசோக் குமார்
Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.