ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி பெண்களின் முன்னேற்றத்திற்காக உலக மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரோட்டரி சங்கம், குலசேகரபுரம் ஊராட்சி மன்றம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா குலசேகரபுரம் ஊராட்சியில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் பெண்கள் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி உரலில் கம்பு தானியத்தை இட்டு, உலக்கையால் குத்தி, முறத்தால் தூசி புடைத்தனர். பின்பு திருகையில் பாசி, உளுந்து போன்ற பயறு தானியங்களை இட்டு, இரண்டாக உடைத்து, முறத்தில் தூசி புடைத்து பழைய பாரம்பரியத்தை கண்முன்னே கொண்டுவந்துள்ளனர்.
மேலும் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மாணிக்கவாசகம் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் குலசேகரபுரம் ஊராட்சிக்குட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: '96' திரைப்பட பாணியில் நிகழ்ந்த பெண் மருத்துவர்கள் சந்திப்பு!