ETV Bharat / state

வெளிநாட்டிலிருந்து 32 ஆயிரம் பேரை மீட்டுவந்துள்ளோம் - சர்வதேச உரிமைகள் கழகம் - சர்வதேச மனித உரிமைகள் தினம்

தூத்துக்குடி: வெளிநாட்டில் சிக்கித் தவித்த 32 ஆயிரம் பேரை சர்வதேச உரிமைகள் கழகம் மீட்டுவந்துள்ளது என அதன் நிறுவனத் தலைவர் சுரேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.

rights  international  org  bloodcamp  vis  சர்வதேச உரிமைகள் கழகம்  சர்வதேச உரிமைகள் கழகத்தின் நிறுவன தலைவர் சுரேஷ் கண்ணன்  Suresh Kannan, Founding President of the International League for Rights  International Rights Association Suresh Kannan  International Rights Association Suresh Kannan Press Meet In Thoothukudi  International Human Rights Day  சர்வதேச மனித உரிமைகள் தினம்  சர்வதேச உரிமைகள் கழகம் சுரேஷ் கண்ணன்
International Human Rights Day
author img

By

Published : Dec 21, 2020, 8:28 AM IST

சர்வதேச மனித உரிமைகள் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் மனித உரிமைகள் தின விழா தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது. இதில், சர்வதேச உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் சுரேஷ் கண்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழிப்புணர்வு

மனித உரிமைகள் தின நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ரத்த தான முகாம், இலவச மருத்துவ முகாம் உள்ளிட்டவை நடைபெற்றன. முன்னதாக கரோனா விழிப்புணர்வை வலியுறுத்தி வ.உ. சிதம்பரனார் கல்லூரியிலிருந்து மில்லர்புரத்தில் உள்ள தனியார் பள்ளிவரை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து சுரேஷ் கண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.

கரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மனித உரிமைகள் தின விழாவில் உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டு, விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

மீட்பு

மனித உரிமைகள் தினத்தையொட்டி, பல்வேறு சமூக நல நிகழ்ச்சிகளும் இன்று நடைபெறுகின்றன. தற்போது மனித உரிமைகள் மீறல் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளன.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் சுரேஷ் கண்ணன்

சர்வதேச அளவில் இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற நபர்கள் அங்கிருந்து ஊர் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தவர்கள் என 32 ஆயிரம் பேரை சர்வதேச உரிமைகள் கழகம் மீட்டுவந்துள்ளது என்பது பெருமைக்குரிய விஷயமாக கருதுகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: உங்களின் விஸ்வரூபம்தான் நான், இனி என் பெயர் மக்கள் - கமல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.