ETV Bharat / state

குப்பைச் சேகரிக்கும் வாகனத்தில் புதுமையான முறையில் தேர்தல் விழிப்புணர்வு

author img

By

Published : Mar 27, 2021, 2:26 PM IST

தூத்துக்குடி: குப்பைச் சேகரிக்கும் வாகனத்தின் மூலம் புதுமையான முறையில் தேர்தல் விழிப்புணர்வை மாவட்டத் தேர்தல் அலுவலர் செந்தில் ராஜ் தொடங்கிவைத்தார்.

புதுமையான முறையில் தேர்தல் விழிப்புணர்வு

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாவட்டம்தோறும் தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் தினந்தோறும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி கட்டுப்பாட்டின்கீழ் உள்ள குப்பைச் சேகரிக்கும் வாகனங்கள் மூலமாகப் பொதுமக்களிடம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, விழிப்புணர்வு குறித்த ஒளிபரப்பு செய்திகளை வாகனங்களில் ஒலிக்கவிட்டு தொடங்கிவைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் வீடுகள்தோறும் சென்று தினமும் குப்பை சேகரிக்கப்பட்டுவருகிறது. இதனால் மாநகராட்சி ஆணையர் சரண்யா ஹரி முயற்சியின்பேரில் வீடுகள்தோறும் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கண்டிப்பாகப் பொதுமக்கள் அனைவரும் ஏப்ரல் 6ஆம் தேதி மனசாட்சியுடனும், நேர்மையுடனும் வாக்களிக்க வேண்டும். நமது மாவட்டத்தில் 3,052 முதியோர்கள், ஓய்வுபெற்ற அரசுப் பணியாளர்கள் அஞ்சல் மூலமாக வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களிடமிருந்து அஞ்சல் வாக்குகளைப் பெறுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அஞ்சல் வாக்குகள் அனைத்தும் அரசியல் கட்சியினர் முன்னிலையிலேயே பதிவுசெய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க:இஸ்லாமியர்களிடம் வாக்குச் சேகரித்த சேலம் வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.