தூத்துக்குடி: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் கடந்த 17 மற்றும் 18 அகிய தேதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வரவாறு காணாத மழை பெய்ததால் கடுமையான வெள்ள பாதிப்புக்கு உள்ளாக்கியது.
-
Third day of #HADR mission in South Tamil Nadu #IAF MI-17 V5 & ALH-Dhruv helicopters air dropped over 34 tons of relief materials in more than 30 different places in #Toothkudi #Tirunelveli Districts . pic.twitter.com/c6oewiOff4
— SAC_IAF (@IafSac) December 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Third day of #HADR mission in South Tamil Nadu #IAF MI-17 V5 & ALH-Dhruv helicopters air dropped over 34 tons of relief materials in more than 30 different places in #Toothkudi #Tirunelveli Districts . pic.twitter.com/c6oewiOff4
— SAC_IAF (@IafSac) December 20, 2023Third day of #HADR mission in South Tamil Nadu #IAF MI-17 V5 & ALH-Dhruv helicopters air dropped over 34 tons of relief materials in more than 30 different places in #Toothkudi #Tirunelveli Districts . pic.twitter.com/c6oewiOff4
— SAC_IAF (@IafSac) December 20, 2023
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களை மீட்கும் பணிகளை மாநில அரசுடன் சேர்ந்து இந்திய கடலோர காவல் படையினரும், இந்திய ராணுவத்தினரும் அயராது செய்து வருகின்றனர். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு அத்தியவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் தீவிரமாக மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.
இந்திய கடலோர காவல் படை: இந்திய கடலோர காவல் படையினரால் மதுரையில் டோர்னியர் விமானம் மற்றும் ஏஎல்எச் ஹெலிகாப்டர்கள் நிலை நிறுத்தப்பட்டு உடனுக்குடன் தேவையான மீட்பு பணிகளை செய்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசுடன் ஒருங்கிணைந்து வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள மக்களுக்கு இரண்டு ஹெலிகாப்டர்களில் 600 கிலோ உணவு பொருட்களை நேற்று (டிச.19) இந்திய கடலோர காவல்படை வழங்கியது. அதனை தொடர்ந்து இன்றும் (டிச.20) நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த 800 மணி நேரத்தில் சுமார் 1000 கிலோ நிவாரண பொருட்களை மூன்று ஹெலிகாப்டர்கள் மூலம் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். மேலும், தூத்துக்குடி விமான நிலையம் திறக்கப்படவுள்ள நிலையில் தமிழக அரசுடன் கலந்துரையாடி மேலும் அதிகாமான ஹெலிகாப்டர்களை கொண்டு மீட்பு பணிகளை செய்வதன் மூலம் தூத்துக்குடியில் உள்ள துண்டிக்கப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை எடுத்து செல்ல முடிவு எடுத்துள்ளனர்.
இதற்கிடையில், அதித வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் இருப்பதால் அவர்களுக்கு உதவும் வகையில் இந்திய கடலோர காவல் படையினர் 8 குழுக்களாக பிரிந்து உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். இதில் மருத்துவ உதவி தேவைப்படும் நபர்களை மீட்பு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், தூத்துக்குடி கடலோர பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடலோர படையின் சுஜய் கப்பலில் தயாரிக்கப்பட்டு வரும் உணவுகளை விமானம் மூலம் கடந்த இரண்டு நாட்களாக கடலோரப் பகுதிக்கு அருகில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்திய கடலோர காவல்படையினரால் செய்யப்படும் மீட்பு பணிகளை இந்திய கடலோர காவல்படையின் கிழக்குப் பகுதியின் கமாண்டர் டோனி மைக்கேல் இன்று பார்வையிடச் சென்றார்.
கிராம மக்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம்: தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் முக்கியமாக கிராம பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையிலும், கிராம பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் இன்று (டிச.20) தக்ஷின் பாரத் கீழ் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரை சேர்ந்த மீட்பு குழுவினர் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் குழுவானது தூத்துக்குடி மற்றும் புறநகர் பகுதிகளில் மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். இரண்டாவது குழு கிராம பகுதிகளான கருங்குளம், அறம்பனை, கல்வாய், ஆதிச்சநல்லூர், புளியங்குளம் ஆகிய பகுதிகளில் நிலை நின்று மக்களை மீட்கும் பணியினை செய்து வருகின்றனர்.அதைப்போல் மூன்றாது குழுவினர் ஆழ்வார்திருநகரி, குருகாட்டூர், மஞ்சள்விளை சுகல்தலை ஆகிய பகுதிகளில் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்ட இடங்களில் மக்கள் கடக்கும் வகையில் தற்காலிகமான பாதைகளை இந்திய ராணுவத்தினர் அமைத்துள்ளனர். இந்நிலையில் இன்று 800க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் 134 நபர்கள் உடல் பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் எம்.பி.,கனிமொழியின் வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!