ETV Bharat / state

தூத்துக்குடியில் அதிகரிக்கும் மக்காச்சோள படைப்புழு தாக்குதல்: வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு! - tuticorin corn worm attack increased

தூத்துக்குடி: மாவட்டத்தில் அதிகரிக்கும் மக்காச்சோள படைப்புழு தாக்குதல் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விளைநிலத்தில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

தூத்துக்குடி
தூத்துக்குடி
author img

By

Published : Nov 25, 2020, 3:47 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மக்காச்சோள படைப்புழுத் தாக்குதல் அதிகரித்துவருகிறது. குறிப்பாக அதிகளவில் மானாவாரி வேளாண்மை நடைபெறுகிறது. இங்கு முக்கியப் பயிராக மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. மக்காச்சோள படைப்புழுத் தாக்குதல் அதிகரிப்பு விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தின் பயிர் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் பிரபாகர், பல்கலைக்கழக பேராசிரியர்கள் சாத்தையா, கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன் மற்றும் தூத்துக்குடி வேளாண் இணை இயக்குநர் மொகைதீன் ஆகியோர் படைப்புழுத் தாக்குதல் குறித்து தூத்துக்குடியில் ஆராய்ச்சி மேற்கொள்ள முடிவுசெய்தனர்.

அதன்படி, கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் பகுதியில் விதைக்கப்பட்ட மக்காச்சோள பகுதியில் ஆய்வுமேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த விவசாயிகளிடம் படைப்புழுக்கள் தாக்குதல் குறித்து கேட்டறிந்தனர். மேலும் படைப்புழுத் தாக்குதலிலிருந்து பாதுகாப்பது குறித்த வழிமுறைகளையும் வழங்கினர்.

தூத்துக்குடியில் அதிகரிக்கும் மக்காச்சோள படைப்புழுத் தாக்குதல்

இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "படைப்புழுத் தாக்குதல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்தாண்டைவிட இந்தாண்டு குறைந்துள்ளது. மேலும் இந்தப் படைப்புழுவிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை விவசாயிகளிடம் கூறிவருகிறோம். ஆளில்லா வானூர்திகளைக் கொண்டும் படைப்புழுத் தாக்குதலிலிருந்து பாதுகாக்க மருந்து தெளிப்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டுவருகிறோம்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.