ETV Bharat / state

கோவில்பட்டியில் தனியார் பொறியியல் கல்லூரியில் ஓவியக்கண்காட்சி விழா தொடக்கம்!

author img

By

Published : Oct 9, 2022, 3:33 PM IST

கோவில்பட்டி காலண்டர் ஓவியக் கலைஞர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஓவியக் கண்காட்சி கோவில்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

கோவில்பட்டியில் நேஷனல் பொறியியல் கல்லூரியில் ஓவியக் கண்காட்சி விழா தொடக்கம்!

தூத்துக்குடி: கோவில்பட்டி காலண்டர் ஓவியர் சி.கொண்டையராஜு நினைவாகவும், ஓவியக் கலைஞர்களை பெருமைப்படுத்தும் வகையிலும் ஓவியக் கண்காட்சி விழா கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து இக்கண்காட்சியை கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜூ, ஓவியர் கார்த்திகைசெல்வம் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இக்கண்காட்சி 9,10ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெறும். இக்கண்காட்சியில் கோவில்பட்டி காலண்டர் ஓவியர்கள் மற்றும் சித்திரம் கலைக்கூட மாணாக்கர்களின் படைப்புகளும், 200க்கும் மேற்பட்ட வெளிப்புற ஓவியர்களின் படைப்புகளும் மற்றும் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களின் படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

கண்காட்சியில் ஆயில் பெயிண்டிங், அக்ரிலிக் ஓவியம், போஸ்டர் கலர் ஓவியங்கள், பென்சில் வரைபடங்கள்,

கோவில்பட்டியில் தனியார் பொறியியல் கல்லூரியில் ஓவியக்கண்காட்சி விழா தொடக்கம்!
பேனா வரைபடங்கள், வாட்டர் கலர் ஓவியங்கள், உருவப்பட ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியம், கண்ணாடி ஓவியம், மெட்டல் எம்பாஸ்ஸிங் மற்றும் நெட்டி வேலைப்பாடு முதலான அரிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியை கோவில்பட்டி சுற்று வட்டார ஓவியர்கள், ஓவியக்கலை ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

இதையும் படிங்க:2ஆவது முறையாக திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்; கனிமொழிக்கு முக்கிய பதவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.