ETV Bharat / state

தூத்துக்குடியில் கரோனா சமூக பரவல் இல்லை - மாவட்ட ஆட்சியர் - Tuticorin District collector sandeep nanduri

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று சமூக பரவல் இல்லை என அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

In Tuticorin there is no social spread of coronavirus -District collector

author img

By

Published : Apr 14, 2020, 1:19 PM IST

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 129ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்தது. அதனடிப்படையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் ரவுண்டானா அருகே அமைந்துள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை தீவிரமாக கடைப்பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பு உடையவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் அனைவருக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 150 பேர் வீதம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றது” என்றார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்ச் சந்திப்பு

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சமூக பரவல் கரோனா தொற்று ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...'வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்'-மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.