ETV Bharat / state

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா; செப்டம்பர் 4ல் துவக்கம்! - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருவிழா

Tiruchendur Subramania Swamy Temple Avani Festival: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா இந்த ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கவுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 12:40 PM IST

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு நடக்கும் முக்கிய திருவிழாக்களில் ஆவணி மற்றும் மாசித் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு ஆவணி திருவிழா செப்டம்பர் 4 ஆம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கவுள்ளது.

கொடியேற்றத்தை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறவுள்ளது. காலை 5 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடைபெறவுள்ளது.

மாலையில் அப்பர் சுவாமிகள் கோயிலில் இருந்து தங்க சப்பரத்தில் புறப்பட்டு வீதிகளில் உலவாரபணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபலி நாயகர் அஸ்திரத்தேவருடன் பல்லக்கில் ஒன்பது சந்நிதிகளில் வீதி உலா வந்து கோயிலை சேருவார். செப்டம்பர் 8 ஆம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு சிவன் கோயிலில் இரவு 7:30 மணிக்கு குடைவரை வாயில் தீபாராதனையும் நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து சுவாமியும் அம்மனும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் வீதி உலா வருவர். செப்டம்பர் 9 ஆம் தேதி காலையில் 6 ஆம் திருவிழாவை முன்னிட்டு கோர ரதமும் இரவில் வெள்ளி ரத வீதி உலா நடைபெறவுள்ளது. செப்டம்பர் 10 ஆம் தேதி ஏழாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை ஐந்து மணிக்கு சுவாமி சண்முகர் உருகு சட்ட சேவை நிகழ்ச்சி நடக்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து காலை 8:45 மணிக்கு சுவாமி ஆறுமுகப்பெருமாள் வெட்டிவேர் சப்பரத்தில் காட்சியளிக்கிறார்.

பின்னர் சுவாமி சண்முகர் பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேருவார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கவுள்ளது. மாலை 4 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்புரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

செப்டம்பர் 11 ஆம் தேதி 8 ஆம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலாவுடன் சிவன் கோயிலை வந்து சேருவார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கவுள்ளது. பகல் 12 மணிக்கு பச்சை கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோயிலை வந்தடைவார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செப்டம்பர் 13 ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. ஆவணி திருவிழாவை முன்னிட்டு 4 ஆம் தேதி மற்றும் 7 ஆம் தேதி திருவிழா நாட்களில் அதிகாலை 1 மணிக்கும் மற்ற நாட்களில் கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.

இந்த ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், பிற அறங்காவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும், ஆவணித் திருவிழாவின் தேரோட்டம் நடைபெறக்கூடிய 10 ஆம் திருநாளான செப்டம்பர் 13 ஆம் தேதி 150 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

திருவிழா நாட்களில் 600 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். முக்கிய திருவிழா நாட்களான செப்டம்பர் 7, 8, 9, 10 ஆகிய நான்கு நாட்களுக்கு நாள்தோறும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் சிறப்பு மருத்துவக் குழு கோயிலில் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கல்லூரியில் மாணவியாக பங்கேற்ற அமைச்சர் கீதா ஜீவன்.. தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி கல்லூரி பொன்விழாவில் நெகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.