ETV Bharat / state

'2ஜி ஊழல்வாதிக்கு மக்கள் ஆதரவு இருக்காது' - பியூஷ் கோயல் - தூத்துக்குடி வேட்பாளர்

தூத்துக்குடி: 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளையடித்த ஒரு நபரை, தூத்துக்குடி மக்களவை உறுப்பினராக மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்கொடி பிரச்சாரத்தில் பியூஷ் கோயல்
author img

By

Published : Mar 28, 2019, 7:18 AM IST

கோவில்பட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணி காரியாலயம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை வகித்தார். ரயில்வே மற்றும் நிலக்கரி சுரங்கத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் காரியாலயத்தை திறந்து வைத்த பின் அவர் பேசியதாவது,

தூத்துக்குடி மக்களவை தொகுதியில்பாஜகஒரு மகத்தான வெற்றி பெறப் போகிறது. ஏனென்றால், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மகத்தான கூட்டணியாக தேர்தலை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.பாரதியார் பிறந்த மாவட்டம், அவர் தீண்டாமை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர். பாரதி என்ன கனவு கண்டாரோ அதே கனவு தான் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இருக்கிறதுஎன்றார்.

திமுகவும், காங்கிரசும், நமது நாட்டில் ராணுவத்தின் வல்லமையை, ராணுவ வீரர்களின் துணிச்சலை,இப்படிப்பட்ட துல்லிய தாக்குதல் நடந்ததா? என்று கேட்கிறார்கள். 10 ஆண்டுகளாக திமுகவும், காங்கிரசும் நாட்டையே கொள்ளையடித்ததார்கள் என்பது தெரியும். 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளையடித்த ஒரு நபரை, தூத்துக்குடி மக்களவைதனது உறுப்பினராகத் தேர்ந்து எடுத்துவிடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். திரும்ப திரும்ப ஊழல் வேட்பாளர்களுக்கு நாம் வாக்களித்தால் நமது நலன்கள் கேள்விக்குறியாகிவிடும், என்றார்.

கோவில்பட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணி காரியாலயம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை வகித்தார். மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரி சுரங்கத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் காரியாலயத்தை திறந்து வைத்தார். பின்னர் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசும்போது,
கனிமொழி திரும்ப போய்விடுவது நல்லது. அவர்களுக்கு ராஜ்யசபா தான் பொருத்தமான இடம் என்று எனக்குத் தோன்றுகிறது.

தூத்துக்குடி பாராளுமன்றம் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு மகத்தான வெற்றி பெறப் போகிறது. ஏனென்றால் தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மகத்தான கூட்டணியாக தேர்தலை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

தூத்துக்குடி என்பது ஆசீர்வதிக்கப்பட்ட மண். இந்த நாட்டுடைய மகத்தான தவப்புதல்வன் சுப்பிரமணிய பாரதியார் பிறந்த மாவட்டம் இது. இந்த நாட்டில் இருந்து வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என அவர் கனவு கண்டு கொண்டிருந்தார். இந்த நாட்டில் யார் மீதும் பாரபட்சம் இருக்க கூடாது. தீண்டாமை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர் சுப்பிரமணிய பாரதியார்.

பாரதி என்ன கனவு கண்டாரோ அதே கனவு தான் பிரதமர் நரேந்திர மோடிக்கும் உண்டு. தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் அதே எண்ணம் தான். பிரதமர் மோடி, நாட்டில் உள்ள 50 கோடி மக்களுக்கு இலவசமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வழங்கியிருக்கிறார். இதனால் தமிழகத்தில் மட்டும் 90 ஆயிரம் பேர் பலன் பெற்றுள்ளனர்.

மேலும், நாட்டில் 10 கோடிக்கு மேலான மக்கள் இலவச கழிப்பறை திட்டத்தில் பயனடைந்துள்ளனர். 7 கோடி பேர் இலவச சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தில் பயன் பெற்றுள்ளனர். ஏழை எளிய விவசாயிகளின் நல வாழ்வை கருதி 5 ஏக்கர், அதற்கு குறைவாக உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் பிரதம மந்திரி திட்டத்தில், நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சாரா தொழிலாளர்கள் பெரிய பெரிய நிறுவனங்களை பதவியில் இல்லாத ஒரு தொழிலாளர்கள் 60 வயது கடந்தவுடன் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற திட்டத்தையும் நரேந்திர மோடி உத்தரவாதப்படுத்தி இருக்கிறார்.

திமுகவும், காங்கிரசும், நமது நாட்டில் ராணுவத்தின் வல்லமையை, ராணுவ வீரர்களின் துணிச்சலை கேள்வி கேட்கிறார்கள். இப்படிப்பட்ட துல்லிய தாக்குதல் நடந்ததா? என்று கேள்வி கேட்கிறார்கள். உங்களுக்கு இப்படி கேட்க வெட்கமாக இல்லையா? நமது ராணுவத்தின் வலிமையை குறைத்து எடை போட முடியுமா?. திமுகவும், காங்கிரசும் நமது ராணுவத்தின் வலிமையை குறைத்து மதிப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

10 ஆண்டுகளாக திமுகவும், காங்கிரசும் நாட்டையே கொள்ளையடித்ததார்கள் என்பது தெரியும். மிக துரதிஷ்டவசமான அரசியல் இந்த அரசியல். 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளையடித்த ஒரு நபரை, தூத்துக்குடி பாராளுமன்றம் தனது உறுப்பினராகத் தேர்ந்து எடுத்து விடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். திரும்ப திரும்ப ஊழல் வேட்பாளர்களுக்கு நாம் வாக்களித்தால் நமது நலன்கள் கேள்விக்குறியாகிவிடும்.

இந்த தேர்தல் என்பது ஒரு சமூக ஊழியராக உள்ள தமிழிசைக்கும், ஒரு ஊழல் வேட்பாளருக்கும் நடக்கிற ஒரு யுத்தம் என்றார் அவர்.

கூட்டத்தில், மக்களவை வேட்பாளர் தமிழிசை சௌந்திரராஜன்,  விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் சின்னப்பன், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், தமமுக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 Photo FTP
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.