ETV Bharat / state

'உடன்குடி மின் உற்பத்தி திட்டப்பணி 2023-க்குள் கொண்டுவர திட்டம்'

தூத்துக்குடி: உடன்குடி மின் உற்பத்தி திட்டப்பணியை 2023-க்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தங்கமணி
author img

By

Published : Nov 6, 2019, 7:38 AM IST

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்குள்பட்ட தென்னம்பட்டி பகுதியில் புதிய துணை மின் நிலைய சோதனை ஓட்டத்தை மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "தென்னம்பட்டியில் துணை மின் நிலையம் சோதனை ஓட்டமாகத் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், ஆயிரத்து 682 துணை மின் நிலையங்கள் உள்ளன.

சோதனை ஒட்டத்தை தொடங்கி வைக்கும் அமைச்சர் தங்கமணி
சோதனை ஒட்டத்தை தொடங்கி வைக்கும் அமைச்சர் தங்கமணி
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேவைக்கேற்ப துணை மின் நிலையத்தை அமைப்பதும் பசுமை வழித்தடத்தை அதிகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மேலும் மரபுசாரா எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் காரணமாக தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் தகவல் தவறானது. தற்பொழுது முழுவதுமாக டெண்டர் முறையில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு மின்சாரம் வாங்கப்படுகிறது.
தென்னம்பட்டியில் புதிய துணை மின் நிலைய சோதனை ஓட்ட விழா

சில தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் அவர்களுடைய நிர்வாகக் காரணங்களாக இயங்காமல் இருக்கலாம். பசுமை வழித்தடத்தை உருவாக்கித் தர வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கைவைத்துள்ளோம். அதுபோல், தமிழ்நாட்டில் 120 மெகாவாட் மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு கொடுப்பதை 500 மெகாவாட்டாக அதிகரிக்க கேட்டுள்ளோம்.

மூன்றாயிரம் மெகாவாட் சோலார் மின் உற்பத்தியை ஆறாயிரம் மெகாவாட்டாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். உடன்குடி மின் திட்டம் பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு பின்பு தற்பொழுது பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. இந்தத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. 2023-க்குள் இந்தத் திட்டத்தை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம்... மின் பகிர்மான கழகம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Intro:உடன்குடி மின் உற்பத்தி திட்டப்பணியை 2023-க்குள் கொரண்டுவர திட்டம் - மின்சார துறை அமைச்சர் தங்கமணி பேட்டிBody:

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகாவுக்குட்பட்ட தென்னம்பட்டி பகுதியில் புதிய துணை மின் நிலைய சோதனை ஓட்டத்தை தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

தூத்துக்குடி மாவட்டம் தென்னம்பட்டியில் துணை மின் நிலையம் சோதனை ஓட்டமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 1682 துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையம் 1012-வது துணை மின் நிலையமாக 110, 230, 400 கிலோ வாட் திறன் கொண்டதாக தொடங்கப்பட்டுள்ளது.
இது முழுக்க, முழுக்க காற்றாலை சூரியமின்சக்தி, மரபுசாரா எரிசக்தி மூலமாகவும் பெறப்படுகின்ற மின்சாரத்தை மாற்றும் முனையமாக 450 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு சோதனை ஓட்டமாக துணை மின் நிலையமாக கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை தேவைக்கேற்ப துணை மின் நிலையத்தை அமைப்பதும், பசுமை வழித்தடத்தை அதிகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதும் பசுமைவழித்தடத்தை அதிகப்படுத்தும் முயற்சிகளை மாநில அரசு செய்து வருகிறது.

காற்றாலை மூலம் 8,500 மெகாவாட், சூரிய மின் சக்தி மூலம் 3,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மரபுசாரா எரிசக்தி மின்சாரத்தை அதிகப்படுத்தும் நோக்கில் தமிழகம் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தேவைக்கேற்ப மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்கும்.

மரபுசாரா எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் காரணமாக தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்கப் படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படும் தகவல் தவறானது. தற்பொழுது முழுவதுமாக டெண்டர் முறையில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு மின்சாரம் வாங்கப்படுகிறது. சில தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் அவர்களுடைய நிர்வாக காரணங்களாக இயங்காமல் இருக்கலாம். பசுமை வழித்தடத்தை உருவாக்கித் தர வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதுபோல், தமிழகத்திலிருந்து 120 மெகாவாட் மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு கொடுப்பதை 500 மெகாவாட்டாக அதிகரிக்க கேட்டுள்ளோம். 3000 மெகாவாட் சோலார் மின் உற்பத்தியை 6000 மெகாவாட்டாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். உடன்குடி மின் திட்டம் பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு பின்பு தற்பொழுது பணிகள் ஆரம்பித்த நடைபெற்று வருகிறது. திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 2023 க்குள் இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள ஒரு லட்சம் மின்கம்பங்கள் மின்சாரத் துறையில் தயாராக உள்ளது. தேவையான உபகரணமும் தயாராக உள்ளது. எந்த பகுதியில் மின்பாதிப்பு என்றாலும் மின் ஊழியர்கள் உடனடியாக மறு சீரமைப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புதிய மின் இணைப்புகளுக்கு லஞ்சம் பெறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதைத்தொடர்ந்து அவர் விழாவில் பேசுகையில்,
தமிழகம் தொடர்ந்து மின்மிகை மாநிலமாக செயல்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்புக்கு பின்னர் 450 துணை மின் நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர தமிழகம் முழுவதும் 120 துணை மின் நிலையங்களை கூடுதலாக அமைக்கும் பணி பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் தமிழகத்தின் மின் தேவை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் 6000 மெகாவாட் மின்சாரத்தை சத்தீஷ்கர் மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் பயன்பாட்டிற்காக கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கான துணைமின் நிலையம் திருப்பூர் மாவட்டத்தில் அமைய உள்ளது. ஆனால் பொதுமக்கள் என்ற போர்வையில் சமுதாயத்தில் உள்ள அரசியல்வாதிகள் சிலரின் தூண்டுதலின் பேரில் மின் தொடரமைப்புக்கு இடமளிக்காத வகையில் பொது மக்களை தூண்டிவிட்டு வருகின்றனர். இதனால் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. இருப்பினும் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் தற்பொழுது துணை மின் நிலையத்தை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.