ETV Bharat / state

"மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழகத்திற்கு முன்னுரிமை தர வலியுறுத்துவேன்" - கிருஷ்ணசாமி! - thenkasi constituency

தூத்துக்குடி: தென்காசியில் தான் வெற்றி பெற்றால் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை தர வலியுறுத்தப்படும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணசாமி
author img

By

Published : May 7, 2019, 4:36 PM IST

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், " நடைபெற்று முடிந்த மக்களவை, இடைத்தேர்தல்களில் அதிமுக கூட்டணி கட்சியினர் வெற்றி பெறுவார்கள். நடைபெற உள்ள நான்கு இடைத்தேர்தல்களிலும் புதிய தமிழகம் கட்சி அதிமுகவுக்கு முழு ஆதரவு தருகிறது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் கடந்த 1 ஆம் தேதி முதல் அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட 100 கிராமங்களில் வாக்குக்கேட்டு பரப்புரை செய்துள்ளேன்.

புதிய தமிழகம் கட்சிக்கு ஓட்டப்பிடாரம் தொகுதியில் மிக கணிசமான வாக்குகள் உள்ளது. அந்த வலிமைகொண்டு அதிமுக வேட்பாளரை அமோக வெற்றி பெற செய்வோம். புதிய தமிழகம் கட்சியினர் அதிமுகவுடன் நல்ல இனக்கத்துடன் செயல்படுகிறோம். இந்த அரசு மீது மக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.

தென்காசியில் நான் வெற்றி பெற்றால் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என வலியுறுத்துவேன். ஓட்டப்பிடாரத்தில் திறன் மேம்பாடு பயிற்சி மையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை பூங்கா திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் " என்றார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில்,

நடைபெற்றுமுடிந்த பாராளுமன்றம், இடைத்தேர்தல்களில் அதிமுக கூட்டணி கட்சியினர் வெற்றி பெறுவார்கள்.
நடைபெற உள்ள
4 இடைதேர்களிலும் புதியதமிழகம் கட்சி அதிமுகவுக்கு முழு ஆதரவு தருகிறது.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் கடந்த
1-ம் தேதி முதல் அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன்.
கிட்டத்தட்ட 100 கிராமங்களில் அவருக்கு ஆதரவாக வாக்குக்கேட்டு பிரசாரம் செய்துள்ளேன்.
புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம் தொகுதியில் மிக கணிசமான வாக்குகள் உள்ளது. அந்த வலிமைகொண்டு அதிமுக வேட்பாளரை அமோக வெற்றி பெற செய்வோம்.
புதிய தமிழகம் கட்சியினர்
அதிமுகவுடன் நல்ல இனக்கத்துடன் செயல்படுகிறோம்.

ஒட்டப்பிடாரத்தில் நான் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டு கோவை சென்றுவிட்டதாக
ஒரு சில ஊடகங்களில் தவறான செய்திகள் வருகிறது.
அதிமுகவுக்கு புதிய தமிழகம் கட்சிக்கும் இம்மி அளவு கூட கருத்து  வேறுபாடுகள் இல்லை.

இந்த அரசு மக்களுக்கு என்ன தவறிழைத்து விட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை.
இந்த அரசு மீது மக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.

தென்காசியில் நான் வெற்றி பெற்றால் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என வலியுறுத்துவேன். ஒட்டப்பிடாரத்தில்
திறன் மேம்பாடு பயிற்சி மையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை பூங்கா திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.
ஸ்டாலினின் ஜனாதிபதி கனவு பலிக்கட்டும்.

புதிய தமிழகம் கட்சியின் கொடியை அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர்.
அதை தடுத்து நிறுத்த முயன்ற கட்சி நிர்வாகியை தாக்கி உள்ளனர்.
கட்சி கொடியை பயன்படுத்துவது சட்ட விரோதம் மட்டுமல்ல தேர்தல் விதிமுறை மீறலாகும்.
இது குறித்து 15 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.