ETV Bharat / state

நகையை திருடிய மனைவி: அவமானம் தாங்க முடியாமல் கணவர் தற்கொலை - 100 பவுன் நகையை திருடி நாடகமாடிய மனைவி

தூத்துக்குடி: சொந்த வீட்டில் மனைவியே நகையை திருடி நாடகமாடியது அம்பலமானதால் அவமானம் தாங்க முடியாமல் துறைமுக ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.

theft
theft
author img

By

Published : Apr 8, 2020, 11:44 AM IST

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரில் வசித்து வந்தவர் வின்சென்ட். துறைமுக ஊழியரான இவர், தன்னுடைய மனைவி ஜான்சி மற்றும் குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 100 பவுன் நகை, 20 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளைப்போனது.

இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வின்சென்ட்டின் மனைவி ஜான்சியே சொந்த வீட்டுக்குள் நகையை திருடியது தெரியவந்தது. காவல் துறையினர் ஜான்சியிடம் நடத்திய விசாரணையில், வீட்டிலிருக்கும் நகை, பணத்தை 2 மகள்களுக்கும் பிரித்துக்கொடுக்க முடிவு செய்தேன். ஆனால் மதுபோதைக்கு அடிமையான என் கணவர், குடிப்பதற்காக நகைகளை விற்று விடுவாரோ என்ற பயத்தில், அந்த நகைகளை நானே திருடி வீட்டிற்கே எதிரே உள்ள எங்களுக்கு சொந்தமான காலி இடத்தில் மண்ணுக்குள் புதைத்தாக வாக்குமூலம் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து, ஜான்சி அளித்த தகவலின்படி, அவரின் வீட்டுக்கு எதிரே உள்ள காலி இடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 100 பவுன் நகைகளை காவல் துறையினர் மீட்டு வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க நடவடிக்கை எடுத்தனர். நகைகளை திருடி ஒளித்துவைத்து நாடகமாடிய ஜான்சியை காவல் துறையினர் கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்தனர்.

இந்நிலையில், கட்டிய மனைவியே தன் மீது நம்பிக்கை இல்லாமல் சொந்த வீட்டில் நகையை திருடி ஒளித்துவைத்து நாடகமாடியது வின்சென்ட்டுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

இதனைச் சுட்டிக்காட்டி அக்கம்பக்கதினரும் காதுபடவே அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த அவர், நள்ளிரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளமுத்து நகர் காவல் துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: உலக நாடுகள் இந்த பெருந்தொற்றுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.