தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நகராட்சியில் தற்காலிக ஓட்டுநராக பணியாற்றியவர் கிருஷ்ணசாமி (28). இவருக்கும், ரோகிணி பிரபாவுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், மூன்றரை வயதில் மனோஜ் என்ற ஆண் குழந்தை இருக்கிறார்.
இந்நிலையில் நேற்று (ஆக.05) கிருஷ்ணசாமி தனது மனைவியிடம் மோட்டார் வாகனத்திற்கு பெட்ரோல் போட பணம் கேட்டுள்ளார். அதற்கு மனைவி தன்னிடம் பணம் இல்லை என்றும் மாமனாரிடம் வாங்கித்தருவதாக கூறுள்ளார்.
![தற்கொலை தீர்வல்ல](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12688567_suicide.jpg)
பெட்ரோலுக்கு பணம் கேட்டு மனைவி கொடுக்காததால் மனமுடைந்த கிருஷ்ணசாமி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர், கிருஷ்ணசாமி உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் வகுப்பால் நேர்ந்த சோகம்: பள்ளி மாணவி தற்கொலை